"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
28 ஜூலை 2011

நாளை 2வது டெஸ்ட் நம்பர் 1 பறிபோகுமா?

0 comments

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்த நிலையில் 2வது ஆட்டம் நாட்டிங்காமில் நாளை தொடங்குகிறது. ஜாகீர்கான் காயத்தால் அவதிப்படுவதால் ஸ்ரீசாந்த் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. சச்சின், காம்பீரும் தேறியுள்ளனர். இதனால் இந்திய அணி ஓரளவு முழு பலத்துடன் ஆயத்தமாகி வருகிறது. பேட்டிங்கில் சச்சின், டோனி, லட்சுமண், காம்பீர் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அதிக ஸ்கோர் குவிக்க உதவினால் பந்துவீச்சு மூலம் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
நாட்டிங்காம் மைதானம் வேகத்திற்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சின் சொர்க்கபூமி என இந்த மைதானம் அழைக்கப்படுகிறது. லார்ட்சை விட இங்கு பந்துகள் அதிகம் பவுன்சாகும். இதனால் இங்கிலாந்து வீரர்கள் படு உற்சாகமாக உள்ளனர். ஆன்டர்சன், பிராடு, டிரம்லட் வேக கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக விளங்கும். பந்து அதிகம் பவுன்சாகும் என்பதால் டிரம்லட் ஷாட்பிட்ச் வகை பந்துவீச்சை கையாளக்கூடும். பேட்டிங்கில் பீட்டர்சன், பிரையர் நல்ல பார்மில் உள்ளனர். ஸ்ட்ராஸ், ஹூக், பெல் மோர்கன் ஆகியோரும் கைகொடுக்கும் பட்சத்தில் கூடுதல் பலம் கிடைக்கும். காயம் எதுவும் ஏற்படாமல் முழு திறமையையும் வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது. முதல் டெஸ்டில் ஹர்பஜன்சிங் ஜொலிக்காததால் நெருக்கடியுடன் களமிறங்குகிறார். இந்த டெஸ்டில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் நம்பர்1 இடத்தை இழக்கும் நிலை உருவாகும். இதனால் டோனி அன்கோ உஷாராக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி