"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
28 ஜூலை 2011

முன் மாதிரி வார்டு உறுப்பினர் ...

0 comments

அலோ.... யாரு செய்யதாக்காவா? நாங்க இன்னாரு பேசுறேன் .

ம்ம் சொல்லுங்க ராத்தா..

அதாவது எங்கூட்டு கூப்பனுக்கு எதுவும் தர மாட்டேங்கிரானுவோ கேட்டாக்கா பட்டுகோட்ட தாசில்தார பாக்க சொல்லுரானுவோ எனக்கு யார தெர்யும் வாப்பா இந்த கூப்ன கூட நீதான் எடுத்து தந்தா .
சரி ராத்தா நான் இப்போ பஞ்சாயத்து போர்டு கூட்டத்து இருக்கேன் சாயங்காலம் உங்க ஊட்டுக்கு வர்றேன்.

இப்படி ஏராளமான பணிகளை செய்யும் 12வது வார்டு உறுப்பினர் நூர்லாட்ஜ் செய்யதாக்காவை இப்பகுதி மக்கள் மறக்கவே மாட்டார்கள்.


அந்த அளவிற்கு இவர் ஏராளமான மக்களின் பிரச்சனைகளை ஓயாது செய்து கொண்டு இன்று 12வது வார்டுமக்களின் நட்ச்சத்திர உறுப்பினராக மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளார் என்றால் மிகையாகாது .

மக்களின் அன்றாட பிரச்சனையான சுகாதாரம் , குடிநீர் ,கழிவு நீர் வடிகால் , தெருவிளக்கு ,அரசால் வழங்கபடும் சலுகைகள் வாக்காளர் பெயர் சேர்த்தல் / நீக்கம், பிறப்பு /இறப்பு சான்று, குடும்ப அட்டை விண்ணப்பித்தல் /புதுபித்தல்,
சாலைவசதி உள்ளிட்ட ஏராளமான மக்கள் பிரச்சனைகளை தானாக முன்வந்து பெற்று தர போராடி வருகிறார் .

சமிபத்தில்12வது வார்டில் உள்ள நுகர் பொருள் வழங்கும் கடையை சேது சாலைக்கு மாற்ற உத்தரவிட்ட பட்டுகோட்டை தாசிலதாரை அணுகி இந்த கடையை அகற்ற கூடாது என வாதிட்டு சுமார் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் அதே வார்டில் கடையமைக்க போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கடை மாற்றத்தால் ஏராளமான மக்கள் நுகர் பொருளை வாங்க சிரமபட்டதில் என் வீட்டாரும் அடங்குவர் .
தற்பொழுது அனைவரும் நிம்மதியாக நுகர் பொருள் வாங்க வித்திட்டார் .

இவரின் இது போன்ற மகத்தான சேவைகளை மக்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள் என்பது ஐயமில்லை !

இது போன்ற உங்கள் வார்டு முன் மாதிரி உறுப்பினர்களை பற்றிய உங்களின் ஆக்கங்களை அதிரை எக்ஸ்பிரசில் பதிந்து கொள்ளலாமே.

நன்றி :அதிரை எக்ஸ்பிரெஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி