அன்பார்ந்த சகோதரர்களே !
அதிரை பைத்துல்மாலின் தலைமை நிலைய நிர்வாகிகளின் சார்பில் இனிய அஸ்ஸலாமு அலைக்கும், புனித ரமளான் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர்வரும் புனித ரமளான் மாதத்தின் அனைத்துப் பேறுகளையும் அடைந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக ! ஆமின்.
புனித ரமளான் தொடங்குவதற்கு முன்பே உங்களது முயற்சிகளை அதிகப்படுத்தி ஜகாத், ஃபித்ரா, ஸதகா, நேர்ச்சை நிதிகளை அதிக அளவில் வசூலித்து அனுப்பி உதவ வேண்டுகிறோம். மேற்கண்ட நிதிகள் குறிப்பிட்டத் திட்டங்களுக்குத்தான் பயன்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
தயவுசெய்து உங்களது முயற்சிகளை உடனடியாய் மேற்கொள்ள வேண்டுகிறோம் !
வஸ்ஸலாம்
பதிப்பு ;abm @
நன்றி :அதிரை எக்ஸ்பிரெஸ்