அஸ்ஸலாமு அலைக்கும். நமதூர் புதுத்தெரு (தெற்கு) மர்ஹூம்.அப்துல் மஜீத் அவர்களுடைய மனைவியும், முஹம்மது இக்பால், அப்துல் ஜப்பார், அஹமது அன்வர், ஃபைசல் அஹமது (துபாய்),அப்துல் ஹாதி (குவைத்) ஆகியோரது தாயாருமான ஜொஹரா அம்மாள் அவர்கள் இன்று 28-07-2011 (வியாழன்) காலை 11:30 மணியளவில் வஃபாத் ஆகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (வெள்ளிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள். அல்குர்ஆன் 21:35
நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரிக்கும்படிச் செய்கிறோம் அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. அல்குர்ஆன் 50:43
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும் பொறுமையை அன்னாரது குடும்பத்தாருக்கு வழங்குவானாக. ஆமீன்.
தகவல் :பைசல் அஹமது (துபை)
நன்றி:அதிரை எக்ஸ்பிரெஸ்