ரமழான் வந்தாலே ஒரு புதுவித உற்சாக உணர்வு நம்மை தொற்றிக்கொள்ளும், இந்த சங்கைமிகு மாதத்தில் வணக்க வழிபாடுகளுக்கு மத்தியில், சஹருக்கும், இஃப்தாருக்கும் உணவு தயாரிப்பதை ஒரு கலையாகவே கையாள்வோம், அந்த வகையில் நோன்புக்கால சமையல் செய்முறைகளும் சில குறிப்புகளும் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.
கறி கஞ்சி.
தேவயான பொருட்கள்
- கேரட் -100 கிராம்
- உருளைகிழங்கு - 100 கிராம்
- தக்காளி -2
- மட்டன் - ¼ கிலோ எலும்பு இல்லாதது
- மஞ்சள் தூள் - தேவையான் அளவு
- மசாலா தூள் – 2½ தேக்கரண்டி
- கருவேப்பில்லை - சிறிது
- அரிசி 1 - கப்
- சிறு பருப்பு - ½ கப்
- இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
- பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- கருவா (பட்டை) - ஒரு துண்டு
- ஏலம - 2
- கிராம்பு - 2
- பச்சை மிளகாய் - 2
- தேங்காய் பால் – ¼ கப்
- நெய் = தாளிப்புக்கு
- பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - (தாளிக்க) சிறிது
செய் முறை :-
முதலில் கறியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.பின் கரியில் தேக்கரண்டிஇஞ்சி, தேக்கரண்டி பூண்டு,தேக்கரண்டி மசாலாதூள், தேவைக்கேற்ப உப்பு இவற்றை சேர்த்து குக்கரில் நன்கு வேக வைத்துக்கொள்ளவும், மேலும் தண்ணீர் வற்றும் அளவுக்கு நன்கு வரட்டிக்கொள்ளவும்.
பின்பு கேரட், உருளைக் கிழங்கை தோல் நீக்கி நன்கு நறுக்கிக் கொள்ளவும், பின்பு குக்கரில் காய்கறிகளி சேர்த்து தக்காளியை இரண்டாக நறுக்கிப் போடவும். பின் அரிசி, பருப்பையும் கழுவி சேர்த்து அத்துடன் மசாலாதூள் தேக்கரண்டி, மஞ்சள் உப்பு இவற்றை சேர்த்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.
காய்கறி வெந்ததும் வரட்டிய கறியையும் சேர்த்து ஒரு விசில் வரும்வரைஅடுப்பில் வைத்திருந்து இறக்கி ஆறியதும், மிக்சியில் போட்டு இரண்டு சுற்றுசுற்றி எடுத்து வைக்கவும்.
பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி பட்டை(கருவா) ஏலம்,கிராம்பு, போட்டு தாளித்து, பின் மீதமிருக்கும் இஞ்சி, பூண்டு விழுதுகளையும் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த கலவையை சேர்த்து, தேங்காய்ப் பால் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கவும், தேவையானால் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

சுவையான கறிகஞ்சி ரெடி
சில டிப்ஸ் .1
நோன்பு திறக்கும்போது, தினமும் ஜூஸ் குடிப்பதாலும், பழங்கள் சாப்பிடுவதாலும், தொண்டை கட்டும், சிலருக்கு தொண்டை கர கரப்பு ஏற்படும், தராவீஹ் தொழும் போது கனைத்து கொண்டே இருப்பார்கள், அதற்கு சுக்கு, ஏலம், கிராம்பு, மிளகு தட்டி போட்டு டீ குடிக்கலாம். இல்லை இதை பொடித்தும் டீ தூளுடன் கலந்து கொள்ளலாம்.
தொடரும் சில டிப்ஸ் .1

பதிப்பு :சகோதரி ஜலீலா
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்