"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
02 ஆகஸ்ட் 2011

நோன்பு கால சமையல் டிப்ஸ்

0 comments
நோன்புகால சமையல் டிப்ஸ் - 1


1. தினம் ஜூஸ் குடிப்பதால், பழங்கள் சாப்பிடுவதால் தொண்டை கட்டும், சிலருக்கு தொண்டை கர கரப்பு ஏற்படும், தராவீஹ் தொழும் போது கனைத்து கொண்டே இருப்பார்கள், அதற்கு சுக்கு, ஏலம், கிராம்பு, மிளகு தட்டி போட்டு டீ குடிக்கலாம். இல்லை இதை பொடித்தும் டீ தூளுடன் கலந்து கொள்ளலாம்

2.கடல் பாசி செய்து ஆறவைக்கும் போது காய்ச்சியதும் சின்ன தட்டில் ஊற்றி மேல கீழ கொட்டுவதை விட இப்படி ஒரு பெரிய சட்டியில் காய்ச்சி ஆறவத்து குளிர வைக்கலாம். ஆறி கட்டி ஆகி குளிர்ந்ததும் துண்டுகள் உடையாமல் தனித்தனியாக எடுக்க வரும்.

3. தினம் செய்யும் கஞ்சிக்கு அரிசியை பொடித்து வைத்து கொள்ள வேண்டும் அதன் அளவு ஒரு கிலோ அரிசியை மிக்சியில் நன்கு பொடித்து கால் கிலோஅளவிற்கு பச்ச பருப்பை கருகாமல் வருத்து , ஒரு மேசை கரண்டி அளவிற்குவெந்தயம் சேர்த்து கலந்து வைக்கவும்.தினம் தேவைக்கு அரை டம்ளர் ஒரு டம்ளர் என்று எடுத்து செய்து கொள்ளலாம்.

4. சமோசா, ஸோமாஸி கட்லெட் போன்றவற்றை அதிகமாக செய்து பிரிட்ஜில் ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும், ஒரு மணி நேரம் கழித்து அது நல்ல பிரீஜ் ஆகி இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து ஒரு கவரில் அல்லது கண்டெயினரில் போட்டு வைத்து கொள்ளலாம். நோன்பிற்கு பொரிக்கும் சமையத்தில் அரை மணி நேரம் முன் எடுத்து ஒரு தட்டில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அடுக்கி வைத்து ஐஸ் விட்டதும் பொரித்து கொள்ளலாம்.

5. இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாவகையான அசைவ சமையலுக்கும் தேவைபடும், அது ஒரு கிலோ இஞ்சிக்கு, 600 கிராம் பூண்டு சேர்த்து அரைத்து லேசாக உப்பு தூவி ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளலாம். சில பேருக்கு இஞ்சி பூண்டு அரைத்து வைத்தால் பச்சையாகிவிடும் அது பூண்டு அதிகம் சேர்த்து இருந்தால் அப்படி ஆகும்.

6. தினம் ரொட்டி , சப்பாத்தி பரோட்டா சாப்பிடுபவர்கள், மாவு குழைத்து உருண்டைகள் போட்டு இப்படி மாவு தூவி டைட்டான கன்டெயினரில் போட்டு இப்படி வைத்து கொண்டால் சுடும் போது எடுத்து சுட்டு சாப்பிட்டு கொள்ளலாம். ரொம்ப ஈசியாக இருக்கும் தண்ணீர் விடாமல் இருக்கும்.

7.சிலர் சகருக்கு சாப்பிட சாதம் பிடிக்காது அவர்கள் இது போல் மொத்தமாக ரொட்டியை அடுக்கு போட்டு லேசாக எண்ணையில்லாமல் இரண்டு பக்கம் திருப்பி போட்டு ஆறவைத்து மொத்தமாக அடுக்கிவைத்து கொள்ளலாம். தேவைக்கு எடுத்து எண்ணை விட்டு சுட்டு சாப்பிடவும்.இது என் அண்ணி எனக்கு சொன்ன டிப்ஸ்

8. நோன்பில் சகரில் ஈசியாக சாப்பிட்டு முடிக்க கட்டு சாதம் (லெமென் ரைஸ், புளி சாதம், லைட் மசாலா கொடுத்து பிரியாணி, தக்காளிசாதம், தயிர் சாதம், மோர்குழம்பு, ரசம் வகைகள்
சேமியா ) இதுபோலும் செய்து சாப்பிடலாம்.



9. சிலர் மீதியான சாதத்தில் கஞ்சி செய்வார்கள் அது அந்த அளவிற்கு டேஸ்ட் வராது , அரிசி பொடித்து நொய்யில் போடுவது தான் நல்ல இருக்கும்.


10. தினம் ரசம் செய்ய, புளி குழம்பு செய்ய புளி பேஸ்ட் செய்து பிரீஜ் செய்து வைத்து கொள்ளுங்கள், தேவைக்கு உடனே இரண்டு முன்று கியுப்ஸ் எடுத்து போட்டு கொள்ளலாம்.புளி பேஸ்ட் செய்வது (கால் கிலோ அளவிற்கு புளி எடுத்து குக்கரில் முன்று நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இற‌க்குங்கள் ஆறியதும் கரைத்து வடிகட்டி ஐஸ்கியுப்கள் அல்லது சின்ன கவர்களில் ஒரு நாளைக்கு தேவையான அளவை கட்டி வைத்து கொள்ளலாம்.



11. குருமா, கஞ்சிக்கு தினம் தேங்காய் பால் தேவைபடும் அதற்கு தேங்காய், முந்திரி பாதம் சேர்த்து அரைத்து ஐஸ் கியுபுகளாக்கி பிரீஜரில் வைத்து கொண்டால் வேலை சுலபம். வெளி நாடு களில் தேங்காய் பொடி கிடைக்கிறது.
ஏற்கனவே முன்பு போட்ட பதிவுதான், இருந்தாலும் இப்ப எல்லோருக்கும் உதவும்.

இந்த தடவை நோன்பு நேரம் அதிகமாக உள்ளதாலும் சரியான வெயிலாக இருப்பதாலும் வாய் புண்கள் வயிற்று புண்கள் அதிகம் வரலாம், அதற்கு பானவகைகள், பழ சாறுகள், ஜவ்வரிசி கஞ்சி ,கீர், பாயாசம் என்று செய்து தினமும் சேர்த்து கொண்டால் நல்லது.

நன்றி : சமையல் அட்டகாசங்கள்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி