"ஆஹா… நோன்பாம்… நமக்கு இனி ஜாலி... ஸ்கூல் பகுதி நேரம் தான்" என முழங்க ஒரு மாதம் ‘சட்டி கஞ்சிதான்’ எனத் துள்ள, நம்ம நண்பர்கள். நோன்பு திறக்கும் நேரம் பார்த்து பள்ளிவாசலுக்கு சென்றால் எங்களைவிட மூத்த செட்கள் பள்ளியினுள் விடாமல் தடுக்க, சின்ன பசங்க அனுமதி இல்லை என கூற, அல்லது பெரியவர்கள் பள்ளியில் இருக்கும் நகரா கம்பை எடுத்து துரத்த, அந்த கஞ்சிக்காக "இல்ல நாங்க நோம்புதான்" என முகபாவணைகள் செய்ய, உதடுகளைக் காய வைத்து நடிக்க, கடைசியில் அந்த குளிர்ந்த மண் சட்டியில் ஊற்றி வைத்த கஞ்சியைச் சுவைக்க.... இரவில் சஹர் நேரம் வரை விளையாட்டுதான்.
கிளித் தட்டு எனச் சொல்லக்கூடிய அருமையான பொழுது போக்கு விளையாட்டு. இந்திய கிராமிய விளையாட்டான ‘
கபடி, கோ-கோ என சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய விளையாட்டுகள் இப்படியாக நேரங்கள், நாள்கள் செல்லும். நாளைக்குப் பெருநாள்... நமக்கு ஜாலிதான் என்று துள்ள, அஸர் நேரம் நெருங்க கட்டெறும்புகள் போல சாரை, சாரையாக செம்மறியாடுகள் வருகை, புளிய மரத்தடியில் கசாப் கடைகள் விழா, அக்காலங்களில் சொந்தம் பந்தங்களுக்கு வாங்கி கொடுப்பது என விற்பனை இரவு முழுவதும் இருக்கும். மறுபுறம் பெரியாப்பா, பெரியம்மா, மாமி, மாமா, வீடு என வசூல் வேட்டைகள் (25,50 காசுகள் கிடைக்கும்)’
வசூல் வேட்டையை முடித்து விட்டு முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட கல்கோனாவை வாங்கி சாப்பிட்டு விட்டு, பூணைக் கொள்ளைக்கும் போய் வருவோம். சிலர் தியேட்டருக்கும் சென்று வருவர்.
பாவம்! இன்றைய இளைய தலைமுறை! எதைப்பற்றி கூற உங்களுக்கு?
நம்ம ஊரில் பழமை வாய்ந்த புளிய மரம் கடற்கரைத் தெருவில் உள்ளவைதான். இவற்றில் ஏறி விளையாடுவதில் குரங்கு கூட எங்களிடம் தோற்று போகும். அந்த அளவுக்கு மரம் தாவுவோம். சில நேரங்களில் தவறி விழுவதும் உண்டு…
நாகூர் செல்ல பல முயற்சிகளுக்கு பிறகு எங்களுக்கு அனுமதி கிடைக்க.... கூடும் எங்கள் பட்டாளம். அதிரை நுழைவாயில் ரயில்வே நிலையத்தில் கரும் புகையைக் கக்கிக் கொண்டு வந்து சேரும் புகைவண்டியில் மக்கள் கூட்டங்கள் மொய்க்க நாங்களும் அந்த கூட்டத்தில் முண்டியடித்து இருக்கையைப் பிடிப்போம். ரயில் கிளம்பியவுடன் குரங்கு சேட்டைகள் ஆரம்பம். அதாவது ஓடும் ரயிலிலேயே பெட்டி விட்டு பெட்டி தாவுவது! அந்த இனிமையான பசுமையான புகை வண்டியின் சப்தங்கள் என்னால் மறக்க முடியவில்லை. முடிந்த அந்த இரயில் பயணங்களையும்தான்!
இனிமையான காலம் எங்களுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு மறைந்த காலங்கள் சற்று எங்களை மேலே உயர்த்தியது. எங்கள் படை படிப்பில் கவனம் செலுத்தியது. தொழுகை, மதரஸா, ஒழுக்கம், மரியாதை, இயற்கை உணவு மற்றும் ஒழுக்க முறைகள், சுத்தமாக இருத்தல், உடைகளில் கவனம், கால்பந்து, கிரிக்கெட், முறையான உடற்பயிற்சிகள் மற்றும் பெற்றோர் புத்திமதிகள், மரியாதைக்குரிய ஆசிரியர்கள், மேற்கூறிய அனைத்து பக்கமும் கவனம் செதுத்தப்பட்டது.
எங்கள் கூட்டணி மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கி அல்லாஹ்வின் உதவியால் ஒரு பட்டதாரியாக உருவாகி வெளி உலகை எட்டிப் பார்க்க நேர்ந்தது. அல்லாஹ்வின் உதவியால் வேலை வாய்ப்புகள் கிடைத்து வாழ்வில் உயர்வு கிடைக்கவும் குடும்ப வாழ்க்கையிலும் உயர முடிந்தது.
அன்று சிறு வயதில், வாலிப வயதில் விளையாட்டுகள், உடற்பயிற்சிகள், ஆரோக்கிய உணவு, ஒழுக்கம், இபாதத், பெரியவர்களுக்கு மரியாதை மற்றும் சொல் கேட்பது போன்ற நல்ல செயல்களில் ஈடுபட்டதால் அல்லாஹ் உதவியால் இன்றும் அதை கடைபிடிக்க முடிகின்றது.
இப்படியாக நமது வாரிசுகளும்……………….! ………?.................!!!...???
தொடரும்...