
ஒரு சிறிய போர் கப்பலின் மாதிரியை உருவாக்கி சாதனை படைத்தார் அதிரையை சார்ந்த பிரைட் மீரான் என்ற இளைஞர்.
இதனை கடந்த ஆகஸ்ட்டு 15ஆம் இந்திய சுதந்திரமடைந்த நாளில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார் இதை ஏராளமான அதிரைமக்கள் கண்டு வியந்து வருகின்றனர்.
இவர் சின்ன வயது முதலே அவ்வப்பொழுது ஏதாவது சிறிய சாதனைகளை செய்து வருகிறார் இவர் முன்பு செய்த சாதனைகளை பிரபல தமிழ் நாளேடுகளில் வெளியாகி உள்ளது .
அது போன்று இதுவும் இடம் பெற்று நமது சமுதாயமும் எதாவது ஒரு துறையில் முன்னேறி உலக புகழ் பட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என கூறுகிறார் இந்த பிரைட் மீரான்.
கடந்த வெள்ளியன்று பிரபல தொலைக்காட்ச்சியின்(சன்,கலைஞர் ) நிருபர்கள் பிரைட் மீரானை பேட்டி எடுப்பதற்காக அதிரை நோக்கி வந்தனர்.
அவர்கள் சகோதரர் பிரைட் மீரான் அவர்களை நேர்காணல் செய்தனர் .இவரின் நேர்காணல் இன்னும் சில நாட்களில் ஒளிபரப்ப இருப்பதாக அதன் நிருபர்கள் கூறினார்கள். இந்த இளைஞரின் தேச பற்றை இப்பகுதி மக்க வெகுவாக பாராட்டுகின்றனர் .
பதிப்பு : அதிரை மீடியா
நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்