"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
15 ஆகஸ்ட் 2011

அதிரையில் சுதந்திர தின விழா....

0 comments
அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக 65வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

இன்று காலை சரியாக காலை 8 மணிக்கு தக்வா பள்ளி அருகில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசிய கொடியை நகரத்தலைவர் கேகே .ஹாஜா நஜ்முதீன் ஏற்றினார்
இதில் மாவட்ட இளைஞர்அணி தலைவர் வக்கீல் முனாஃப் நகர இளைஞரணி அமைப்பாளர் சாகுல் ஹமீத் மாவட்ட பிரதிநிதி எம் ஆர் ஜமால் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர் கொடியேற்றி பேசிய நகரத்தலைவர் நமது இந்த சுத்திரம் பெற நம் முன்னோர்கள் செய்த தியாகத்தை நினவு கூர்ந்து பேசினார்.
இதில் ஏராளமான பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர் அவர்களுக்கு இனிப்பு வழங்கி இந்த இனிய சுதந்திர நாளை நகர இ யு மு லீக் கொண்டாடியது .

இதற்க்கான ஏற்பாடுகளை நகர முஸ்லீம் லீக் சிறப்பாக செய்திருந்தது

இது போல் பேரூர் மன்ற வளாகத்தில் நடந்த கொடியேற்று விழாவில் நகர செயல் அலுவலர் கொடியேற்றினார் இதில் நகர துணைத்தலைவர் இராம குண சேகரன் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் அலுவலக பணியாளர்களும் துப்புரவு தொழிலாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர் .

முத்தமால் தெருவில் நடந்த சுதந்திர தின விழாவில் நகர் முஸ்லீம் லீக் அமைப்பாளர் சாகுல் ஹமீது கொடியேற்றினார் இதில் அந்த பகுதி மக்கள் வெகுவாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நமதூரில் பல பகுதிகளில் இந்த சுதந்திர நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் அனைத்து பள்ளிகூடங்களிலும் இன்று காலை தேசிய கொடிகளை ஏற்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி