சுதந்திரப் போரின் ஆணிவேராய் இருந்தவர்களையும் போராட்டக் களத்தில் உயிர் நீத்த தியாக செம்மல்களையும் நினைவு கூறவேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.
உடல் வலிகளையும் உயிர் அர்பணிப்புகளையும் பொருட்படுத்தாது போராடிப் பெற்ற சுதந்திரத்தை ஆகஸ்ட் 15-ல் மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் தேச வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்ட உள்ளத்துடனும் கொண்டாட வேண்டும் எனற நல்ல எண்ணத்துடன்சுதந்திர முழக்கமிட்டு வீர நடைபோட்டு பாப்புலர் ஃப்ரணடின்; சீருடை அணிந்து சுதந்திர தின அணிவகுப்பை கடந்த பல வருடங்களாக கொண்டாடி வருகின்றது.
அதே போல் இவ்வருடமும் நெல்லை மாவட்ட த்தில் நடைபெறும் சுதந்திர தின அணிவகுப்பில் வீறு நடைபோட்டு போர்பரணி எழூப்பி வீரமுரசு கொட்டி நீதியின் போராளிகளாக சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் 1000 செயல் வீரர்கள் அணிவகுக்க உள்ளனர்.அதில் நமதூரை சார்ந்த இளைய பட்டாளமும் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்