"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
17 ஆகஸ்ட் 2011

பள்ளி கஞ்சிக்கு உதவிடுவீர்!

0 comments
நமதூர் உமர்நகர் (சுரைக்கா கொள்ளை )யில் அமைந்திருக்கும் கலிஃபா உமர் பள்ளியில் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த பகுதியல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் ஏராளமாக வசித்து வருகின்றனர்

இதனால் இந்த பள்ளிகென்று போதிய நிரந்தர வருமானம் இல்லாமல் தினம் தினம் கஞ்சிக்கு திண்டாடுவதாக அந்த பள்ளியின் முத்தவல்லி முகமது மாலிக் தெரிவித்தார் .

இந்த முஹல்லாவை பொறுத்த வரையிலும் அனைவரும் அன்றாடம் உழைத்து சாப்பிடும் மக்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இந்த பள்ளி வருமானம் இன்றி திணறி வருகிறது.

ஒருநாளைக்கு கஞ்சிக்கான செலவு 2850ருபாய் ஆகிறது இந்த தொகையை தோது பண்ணுவது மிகவும் சிரமமாக உள்ளது இனி இருக்கு சொச்ச நாளைக்கு சகோதர அன்பர்கள் இந்த பகுதி மக்களின் நோன்பு திறக்க உதவி செய்து இறை பேற்றை பெற்றுகொள்ள வேண்டு என இந்த பள்ளியின் நிர்வாகி கூறுகிறார் .

தங்களின் நன்கொடைகளை மேற்காணும் பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பி இந்த சங்கை குரிய ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் அருளை அள்ளி சுமந்துகொள்ள அன்போடு கேட்டு கொள்கிறது அதிரை எக்ஸ்பிரஸ் .

தங்களது உதவிகளை கீழ் காணும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம் ..

கலிஃபா உமர் (ரலி) பவுண்டேஷன் ட்ரஸ்ட்
இந்தியன் வங்கி அதிரை கிளை
கணக்கு எண் : 909203067
தொடர்புக்கு பள்ளியின் முத்தவல்லி முகமது மாலிக் : 88071 65681

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி