"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
28 செப்டம்பர் 2011

துபாயில் 14 இந்தியக் கைதிகளை விடுவிக்கப் பாடுபடும் தமிழர்

0 comments

துபாயில் சிறையில் வாடும் 14 இந்தியக் கைதிகளை விடுவிக்கும் பணியில் ஒரு தமிழர் ஈடுபட்டுள்ளார்.

துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் பல்வேறு இந்திய சங்கங்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மையத்தின் ( Indian Community Welfare Committee ) கன்வீனராக செயல்பட்டு வரும் கே. குமார் ஒரு தமிழர் ஆவார்.

இந்திய சமூக நல மையம் துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அமீரகத்தின் பல்வேறு சிறைச்சாலைகளில் எதிர்பாராதவிதமான சூழலில் குற்றத்திற்கு ஆளாகி சிறைகளில் வாடி வரும் 14 இந்தியர்களுக்கு தியா எனப்படும் இழப்பீட்டுத் தொகை (blood money) வழங்கி அவர்களை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 14 பேரில் பாதிக்கு மேற்பட்டோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு தாயகம் சென்றுள்ளனர். இன்னும் சில தினங்களில் பிறர் விடுவிக்கப்பட இருக்கின்றனர்.

இதற்காக சுமார் 2.6 மில்லியன் திர்ஹம் நிதி திரட்டப்பட்டது. சில வழக்குகளில் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே பாதித் தொகையினை வழங்கி உதவின.

இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, கன்சுலேட் அலுவலர்கள், ஆர்.கே. நாயர், வழக்கறிஞர்கள் வினோத், பென்ஸி, அனில் உள்ளிட்டோர் இப்பணிகளுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வந்துள்ளனர்.

மேலும் அமீரக, இந்திய ஊடகங்களுக்கும் கே. குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்திய சமூக நல மையத்துக்கு இது போன்ற பணிகளுக்கு நிதி திரட்ட அக்டோபர் 13-ம் தேதி துபாய் அல் புஸ்தான் ரோடனாவில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜிலா கான் பங்குபெறும் கஸல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

adiraifact

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி