ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை – 21வது வார்டின் அவல நிலை!
21வது வார்டிற்கு உட்பட்ட ஆலடி தெருவாசி என்ற அடிப்படையில் மக்களின் கோரிக்கையாக கீழ்காணும் அவல நிலையை உள்ளாட்சி மன்ற ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
21வது வார்டிற்கு உட்பட்ட ஆலடி தெரு மற்றும் முஹைதீன் ஜும்ஆ பள்ளிக்கு வரும் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை கூண்டுகள் சரி வர பராமரிக்கப் படுவதில்லை. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்கள்.
இப்பொழுது குப்பை கொட்டுவதற்க்கென வைக்கப்பட்டுள்ள பெட்டிகள் இருக்கும்போது, மகளிர் அரங்கத்தின் கூண்டுகள் எதற்கு? மகளிர் அரங்கத்தின் நோக்கம் சரிதான், ஆனால் கூண்டுகளை வைக்காமல் பெட்டிகளையே பராமரிப்பது நல்லது, ஏனெனில், கூண்டுகளிலிருந்து குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி பின்னர் நிரம்பி வழிந்து கீழே சிதறிப்போய் கிடக்கும் குப்பைகள் ஆடு, மாடு, நாய் போன்ற பிராணிகளால் களைத்து சாலையில் அங்கும் இங்கும் சிதறடிக்கப்படுகின்றது. இச்சுகாதார சீர்கேட்டை போக்க உள்ளாட்சி மன்ற ஆட்சியாளர்கள் முயற்சி செய்வார்களா?
2. மின் கம்பம்:
21வது வார்டிற்கு உட்பட்ட ஆலடி தெரு 2 வது லைனில் முஹைதீன் ஜும்ஆ பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள மின் கம்பம் (TP 1025) மிகவும் அபாயகரமாக உள்ளது, இதை எத்தனையோ முறை மின்சார வாரியத்திற்கு எடுத்துரைத்தும் மாற்றித்தரவில்லை, அதற்கு அவர்கள் கூறும் பதில் சிமெண்ட் கான்கிரீட் மின் கம்பங்கள் பற்றாக்குறை, மழை காலங்களில் இதனால் எத்தனையோ அபாயங்கள் எற்படுவதற்கு வாய்ப்புண்டு என எடுத்துக்கூறியும் மக்களின் அச்சத்தை செவிமடுக்காத அதிரை மின்சார வாரியத்தின் போக்கை உள்ளாட்சி மன்ற ஆட்சியாளர்களாவது மாற்றுவார்களா?
தகவல்: அஹ்மத் தௌஃபீக்
இ-மெயில்: mail2taufiq@gmail.com
thanks : adirai.in