ஏதேனும் ஓர் தீவிரவாதச் செயல்களுடன் முஸ்லிம்களை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிடும் ஊடகங்களில் சைக்கிள் கேப்பில் இடம்பெறும் ஓர் வாசகம் "சவூதியில் ஆயுதப்பயிற்சி பெற்றவர்" என்று சர்வதேச அந்தஸ்தை குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்குவர்!
இது ஒரே கல்லில் இருமாங்காய்கள் அடிக்கும் யுக்தி! அதாவது முஸ்லிமை தீவிரவாதியாக சித்தரித்த கையோடு "சவூதியில் ஆயுதப் பயிற்சி" என்ற நச்சுக்கருத்தையும் பரப்பி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் திணிப்பதுதான் இச்சொல்லாடலின் நோக்கமாகும்.
செய்தியை வாசிக்கும் நடுநிலை வாசகர்களுக்கு தீவிரவாத குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்மீது வெருப்பு ஏற்பட்ட சூட்டோடு சவூதியையும் வெருக்க வேண்டும் என்ற நல்லெண்ணமே காரணம். சவூதி அரேபியாயை வெருக்கும் அளவுக்கு அந்நாட்டில் ஒன்றுமே நிகழவில்லை என்று யாரும் சொல்லவில்லை. உண்மைக்கு மாறான செய்திக்கு வலுவூட்ட மதம் சார்ந்த வெருப்புணர்வை விதைப்பதை தோலுரித்துக் காட்டுவதே இப்பதிவின் நோக்கம்.
தேசப்பற்றுள்ள முஸ்லிம்களை மட்டுமின்றி இந்துக்களையும் ஆங்கிலேயருக்குக் கூ/காட்டிக்கொடுத்து அவர்கள் வழங்கிய உயர்பதவிகளை அனுபவித்த 2% கும்பலின் இரண்டாம், மூன்றாம் நான்காம் தலைமுறையினர் பத்மா சேஷாத்திரியிலும் IITயிலும் படித்து முடித்த கையோடு அமெரிக்காவிலும் பிறதேசங்களிலும் குடும்பத்தோடு செட்டிலாகும்போது, 3.5% இடஒதுக்கீட்டை நிரப்பும் அளவுக்கூட கல்விபெற்றிராத முஸ்லிம்கள் பஞ்சம் பிழைக்க தஞ்சடமையும் நாடுகளில் சவூதியும் ஒன்று. இந்நிலையில் அங்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்படுவதாக எழுதுவது உண்மைக்கு மாறானது என்பதோடு வன்மம் நிறைந்ததும் ஆகும்.
அங்குள்ள மன்னராட்சிக்கு எதிரானவர்கள்கூட போராட்டக் களமாக பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் தேர்ந்தெடுத்து ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக அந்நாட்டு போராளிகளுடன் போராடிக்கொண்டிருக்கும் போது இந்தியாவில் தீவிரவாதச் செயல்களைச் செய்வதற்கு சவூதியில் ஆயுதப் பயிற்சி என்பது கடைந்தெடுத்த புரட்டு என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தனிநபரோ குழுவோ அந்நாடு குறித்து மட்டுமின்றி பிறநாடுகள் குறித்தும் பேசக்கூட முடியாதபோது அங்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்படுகிறது என்பதை இவர்களின் அறியாமை என்று விடமுடியாது.
கொடிய ஆயுதங்களுடன் RSS,ABVP,துர்கா வாகினி போன்ற பயங்கரவாத அமைப்புகள் நம்நாட்டில் 'ஸாகா' என்ற பெயரில் ஆயுதப்பயிற்சி செய்வதை கண்டுகொள்ளாமல் ஏதோ 'யோகா' பயிற்சி செய்ததைப்போல் செய்தி வெளியிடும் நமது ஊடகங்களின் நடுநிலை நாறிக்கிடக்கிறது. மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கும்பமேளாவில் கூடும் சாமியார்களுக்கு கையில் திரிசூலம் எதற்கு? என்று எந்த ஊடகமும் கேள்வி எழுப்பியதில்லை.
நேபாளத்திலிருந்து இந்தியாவிற்குள் பணியாற்றும் நேபாளிகளை எப்படி தொழிலுக்காக வந்தவர்கள் எவ்வாறு குறிப்பிடுகிறோமோ அவ்வாறே சவூதியில் பணியாற்றுவதற்காகச் சென்றவர்களையும் குறிப்பிட வேண்டும். அவர்கள் போலி/போலீஸ் வழக்குகளில் தேடப்படுபவர்களாக இருந்தாலும் அவர்களையும் அவ்வாறே குறிப்பிட வேண்டும் என்பதை "சவூதி தலைநகர் துபாய்" என்று தங்கள் அறியாமையை உணராது பரபரப்புச் செய்திகளை தரும் செய்தியாளர்களைக் கொண்டுள்ள ஊடகங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதிரை எக்ஸ்பிரஸ்சில் சொன்னது :-
துக்ளக் நியூஸ் குழுமம் said...///கொஞ்சம் அசந்தால் சவூதியிலுள்ள மக்காவில் 30 லட்சம் தீவிரவாதிகள் ஆண்டுதோறும் கூடுகிறார்கள் என்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதைக்கூட கதைகட்டி விடுவார்கள் இந்த கயவர்கள்!///
///கசாபு கடையில் ஆடு அறுக்க கத்தி வைத்திருந்தால்கூட அவரை அஜ்மல் கசாபுடன் தொடர்பு படுத்தி எழுதுவிடுவார்களோ என்ற அச்சத்துடந்தான் இந்திய முஸ்லிம்களின் நிலை உள்ளது!///
மேற்கூறப்பட்ட இரண்டு வாசகங்களும் கொஞ்சம் ஓவர்.
எச்சரிக்கை விடலாம்..... பயமுருத்தகூடாது
ஆதங்கப்டுத்தலாம்......அடிமைத்தனத்தை உண்டு பண்ணக்கூடாது...
மீடியாவை வைத்து நம்மை அருவுருக்க செய்யலாம், அசிங்கப்படுத்தலாம், அலட்சியப்படுத்தலாம், அவமானப்படுத்தலாம்.
ஆனால்....
பல்துலக்குவதிளிருந்து, தூங்குவது வரை இஸ்லாம் கட்டித் தந்த நெறிமுறையை பார்த்துப் பார்த்து அலையலையாய் இஸ்லாம் பக்கம் திரும்பும் ஐரோப்பா, அமெரிக்கா மக்கள் வந்துக் கொண்டிரிக்கிரார்கள்.
நமக்கு படிப்பினை வேண்டும் என்று கட்டுரை எழுதிய நீங்கள், அதற்க்குண்டான தீர்வை இரண்டு வரியில் சொல்லி இருக்கலாமே.
அதற்க்கு பதில் அளித்தவர் :-
அதிரைக்காரன் said...
சர்வதேச செய்தி நிறுவனங்கள் யூதர்களின் கையில்; இந்திய செய்தி நிறுவனங்கள் ஆதிக்க சாதியினரின் காலடியில். இவர்களிருவரும் ஒரே (மத்திய ஆசியாவிலிருந்து வந்த) இனம் என்பதும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுவதில் இருவருக்கும் மிகுந்த ஒற்றுமை உள்ளதும் அறிந்ததே.பரஸ்பரம் செய்தி பரிமாறிக்கொள்ளும் செய்தி ஏஜென்ஸிகள் கூடுதலாக "முஸ்லிம்களை சிறுமைபடுத்தும் ரீதியான கருத்துக்களை" தன்னிச்சையாக சேர்த்து எழுதுவர்.
உதாரணமாக,பிரிட்டீஷ் ராணுவத்துக்கெதிராகப் போரிட்ட இந்தியர்கள் சுதந்திரப் போராளிகள். அதே பிரிட்டிஷ ராணுவத்துக்கு எதிராகப் போராடும் ஈராக்,ஆப்கன் முஸ்லிம்கல் தீவிரவாதிகள். சுதந்திரத்திற்கு எதிராகப் போராடும் ஒருசாராரை தியாகிகள் என்றும் இன்னொரு சாராரை தீவிரவாதிகள் என்றும் சொல்வதற்குக் காரணம் அவர்களின் மதம். ஆக, இவர்கள் சொல்லவருவது என்னவெனில் முஸ்லிம்கள் சுதந்திரத்திற்காகப் போராடினால்கூட அவர்கள் தீவிரவாதிகள்!
நம்நாட்டிலும் பலவெளிநாட்டவர்கள் பிழைப்புக்காக பணி நிமித்தம் இருக்கிறார்கள். இலங்கையிலிருந்தும், சீனாவிலிருந்தும் அகதிகளாக வந்தவர்களும் உண்டு. அவர்கள் இந்தியாவுக்கு ஆய்தப்பயிற்சி எடுக்க வந்திருப்பதாக அந்நாட்டினர் சொல்வதில்லை. சவூதிக்கு பணிநிமித்தம் செல்வதையும் அவ்வகையில்தான் கருத வேண்டும். சவுதியில் பாணியாற்றச் செல்பவர்கள் ஆயுதப்பயிற்சிக்காக என்பது காழ்ப்புணர்வின் வெளிப்பாடன்றி வேறில்லை. ஏன் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களை அங்கு ஆயுதப்பயிற்சி எடுக்கச் சென்றதாக எழுதினால் தங்கள் வயிற்றுப்பிழைப்பில் மண் விழும் என்பதால் முஸ்லிம்களின்மீது வெருப்புணர்வை வளர்க்க இத்தகைய இடைச்செருகள் வார்த்தைகள் என்பதைச் சுட்டவே இந்த பதிவு. இதுபோன்ற கயமைத்தனத்தை மக்களிடம் எடுத்துச்சொல்வதன் மூலம் இவர்களின் முகமூடிகள் கிழிக்கப்படுமாயின் அதுவே இதற்கான தீர்வாகும். அதற்கான சிறுமுயற்சிதான் இந்தப்பதிவு.
மற்ற விமர்சனங்களுக்கு பிறகு பதில் தருகிறேன். 'துக்ளக் நியூஸ் குழுமம்' என்பது ஒருவரா? பலரா? ஏனெனில் உங்களின் உரையாடல் ஒருவரின் கருத்தாகவே உள்ளது. நீங்கள் விரும்பினால் adiraiwala@ஜிமெயிலுக்கு மடலிட்டு உங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

thanks : -adiraixpress