2. கட்சியின் “தல” பிறந்த / நினைவு நாளுக்கு கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடும் உங்களுக்கு................
3. ஆடம்பர செலவு செய்து மேடை போட்டு கூட்டம் கூட்டும் உங்களுக்கு................
4. தங்களின் கட்சிக்காக தெருத் தெருவா போஸ்டர் ஓட்டும் உங்களுக்கு................
5. கட்சி ஆபிசில் கூட்டம் போட்டு வெட்டிப்பேச்சு பேசும் உங்களுக்கு............
6. தெருத் தெருவாக் கட்சிக் கொடி ஏற்றும் உங்களுக்கு......................
7. எங்கேயோ நடக்கும் மாநாட்டிற்காக வசூல் செய்து வேன்களில் அழைத்துச் செல்லும் உங்களுக்கு................
8. சீட்டுக்காக நோட்டுக்கள் செலவு செய்யும் உங்களுக்கு................
9. மதுபானக் கடைகளில் மாமுலாக ஊக்கம் பெரும் உங்களுக்கு.........................
10. கட்சிப் பதவிகளுக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவோர் குழி தோண்டும் உங்களுக்கு......................
நமதூர் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளாகிய....................
1. காஸ் தட்டுப்பாடு
2. “அதிரைப்பட்டினம்” புதிய பேருந்து நிலையம்
3. அரசு மருத்துவ மனை 24 மணி நேர கூடுதல் டாக்டருடன் சேவை
4. பாதாள சாக்கடைத் திட்டம்
5. புதிய “தீ” அணைப்பு அலுவலகம்
6. அறிவிக்கப்படாத மின்சாரத் துண்டிப்பு
7. அகல ரயில் பாதைத் திட்டம்
8. சமூக குற்றங்கள் ஒழிப்பு
9. கல்வி, சுகாதார விழிப்புணர்வு
10. வட்டி, லஞ்சம் ஒழிப்பு
11. ரேஷன் கடை முறைகேடுகள் தடுப்பு
12. முதியோர் நலன், வேலைவாய்ப்புகள்
13. இலவச மருத்துவ முகாம்
14. கோடைக் கால இலவசக் கல்விப் பயிற்சி
இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடி நமதூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்யத்தான் முடியுமா ?
ச்சும்மா தான் கேக்கிறேன்........! “தில்லு” இருக்கா ? சொல்லேன் பாப்போம் !