"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
14 ஏப்ரல் 2012

மனைவிகளுக்கு சில உபதேசங்கள்....

0 comments

Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuhu...
 
1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. உங்கள் கணவன் வீட்டினுள் நுழைந்தது முதல் அந்த வாசனையை உணரச் செய்யுங்கள்.


2. கணவன் ஓய்வெடுக்கக்கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்போதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயற்படுங்கள்.


3. கணவனுடனான தொடர்ச்சியான உரையாடலை, கலந்துரையாடலை பேணிக் கொள்ளுங்கள். வாதாட்டம், தனது கருத்தில் பிடிவாதம் என்பவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.


4. உங்களுக்கு ஷரீஆ விதித்துள்ள பொறுப்புக்களை விளங்கிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய விடயங்களை ஷரீஆ உங்களுக்கு வழங்கியுள்ளது.


5. உங்கள் சத்தத்தை உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் போது.


6. நீங்கள் இருவரும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில் அது உங்கள் இருவருக்கும் சந்தோஷத்தையும் அன்பையும் ஒளியையும் ஏற்படுத்துகின்றது.


7. கணவன் கோபத்திலிருக்கும் போது நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி இரவில் உறங்கச் செல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கணவன் தான் உங்களுக்கு சொர்க்கமும் நரகமும்.


8. கணவன் ஆடைகளை தெரிவு செய்வதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தெரிவு செய்து வழங்குங்கள்.


9. கணவனின் தேவைகளை விளங்கிக் கொள்வதற்கும் அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.


10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.


11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்துக் கொண்டிருக்காதீர்கள்.


12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமணப் பெண்ணைப் போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்கச் செல்ல வேண்டாம்.


13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.


14. எப்போதும் புன்னகையுடனும் அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.


15. கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கு முக்கியமானது என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். எப்போதும் தோற்றத்திலும் வார்த்தையிலும் அவரை வரவேற்கும் போது புதிய விடயங்களை செய்யுங்கள்.


16. ஏதாவதொரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாற்றமாக உற்சாகத்துடன் விரைவாக அதனை நிறைவேற்றுங்கள்.


17. வீட்டுத் தளபாடங்களை கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது புதிய முறையில் ஒழுங்குபடுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்காகவே செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.


18. வீட்டை அழகிய முறையில் நிருவகிப்பதற்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் முதன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


19. பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திறமைகளை திறன்பட கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்களுடைய வீட்டிற்கும் உங்களது தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.


20. கணவன் வீட்டுக்கு கொண்டு வரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத்தோடு பெற்றுக் கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள்.


21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும் ஒழுங்காக வைப்பதிலும் பேணுதலாக இருங்கள். சிலவேளை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.


22. எப்போதும் திருப்திப்படுபவளாக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்ந்திடுங்கள். மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.


23. குடும்ப ஒன்று கூடல்களை பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யுங்கள்.


24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும் போது அவரிடம் முறைப்பாடுகளை வேதனைகளை முன்வைக்காதீர்கள்.


25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.


26. குழந்தைகளைப் பற்றி கணவன் வீடு திரும்பியவுடன் அல்லது தூங்கியெழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும்போது முறையிடாதீர்கள்.


27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும் போது அல்லது ஏதாவதொரு விடயத்திற்காக அவர்களை தண்டிக்கும் போது நீங்கள் தலையிடவேண்டாம்.


28. குழந்தைகளுக்கும் தந்தைக்குமிடையில் சிறந்த தொடர்பை பேணிக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.


29. நீங்கள் எவ்வளவு தான் வேலைப்பளுவுடன் இருந்தாலும் குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணரச் செய்யுங்கள்.


30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களது திறமைகளை வளர்ப்பதிலும் அவர்களுக்கு பிரயோசனமான விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.


31. உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு சிறந்த தோழிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது ஒவ்வொரு பருவத்திலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானியுங்கள்.


32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவையான விடயங்களை செய்யுங்கள்.


33. குழந்தைகள் மீதும் கணவன் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கிடையில் நடுநிலைமையைப் பேணுங்கள்.


34. கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அவரது பெற்றோர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்குங்கள்.


35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும் கண்ணியத்துடனும் நடத்துங்கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசுப் பொருட்களை வழங்குங்கள்.


36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுங்கள்.


37. கணவனின் உபகரணங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும் நிலையில் வீட்டை வைத்துக் கொள்ளுங்கள்.


39. கணவன் தாமதமாக வரும் போது அவரை கண்டித்துக் கொள்ளாதீர்கள். மாற்றமாக அவரை எதிர்பார்த்திருந்ததை உணரச் செய்யுங்கள்.


40. வீட்டு ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை ஒரு மனைவி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் மட்டுமே. ஆனால் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. எப்போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றோம். அதனை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி