"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
29 ஜூலை 2011

அர்த்தமுள்ள அரட்டை-1 - (நம்ம ஊரு பாசையில் நாட்டு நடப்புகள்)

0 comments

பக்கத்து வீட்டு பாத்திமா: என்னா இஷா தொழுதாச்சா?

எதிர் வீட்டு நபீஸா : ம்.... இப்பதான் தொழுவுனேன். அப்புடீயே உம்மாவுக்கு மருந்து கொடுத்துட்டு வாசல்ல வந்து பார்த்தேன். உன்னைய காணோம்!

பக்கத்து வீட்டு பாத்திமா: இஷா தொழுதுட்டு என் மகன் தஃலீம் படிச்சாங்க. அதான் லேட்டு, இரி அடுப்புல பால் வச்சேன். பார்த்துட்டு வந்துற்றேன்.

எதிர்வீட்டு நபீஸா: வந்தாச்சா, சமையல் கேஸ் ஒரு சிலிண்டருக்கு நேத்து நள்ளிரவு 12 மணிலேந்து 50 ரூபாய் உயர்த்திட்டாங்களாம்!

பக்கத்து வீட்டு பாத்திமா: எல்லா கட்சிகாரணுவலும் போராட்டம் பண்ணதுல தமிழ் நாட்டுல சமையல் கேஸ் மீதான வரியை 4% சதவிதம் குறைத்து விட்டார்களாம்.

எதிர்வீட்டு நபீஸா: இது கண்துடைப்பு தான், விலையை 50 ரூபாய் ஏத்துவாஹலாம். 15 ருபாய் குறைப்பஹலாம். என்னங்க ஞாயம்?

பக்கத்து வீட்டு பாத்திமா: ஒன் மொவன் பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளில படிக்கிறானே! அரசாங்கம் இலவசமாக பஸ் பாஸ் கொடுக்ராங்கலாம் வாங்கியாச்சா?

எதிர்வீட்டு நபீஸா: வாங்கிட்டான்டு நினைக்கிறேன்.

பக்கத்து வீட்டு பாத்திமா: வற்ற வருஷத்துலேந்து கல்வி ஆண்டில் 1 முதல் 10ஆவது வகுப்பு வரை எல்லாருக்கும் மெட்ரிகுலேசன், மாநிலக் கல்வி வாரிய முறை, ஓ,எஸ்,எல்,சி., ஆங்லோ இந்தியன் ஆகிய 4 முறையான கல்வியை ஒழிச்சிட்டு எல்லாருக்கும் ஒரே கல்வி முறை/சமச்சீர் கல்விமுறை வரும் கல்வி ஆண்டுல அமல்படுத்துவாகலாம்.

எதிர்வீட்டு நபீஸா:எனக்கு ஒன்னும் புரியல நம்ம பிள்ளைகளுக்குத்தான் ரொம்ப கஷ்டமா போச்சு (பாவம்)!!

பக்கத்து வீட்டு பாத்திமா: வா குப்பைய போட்டுட்டு வருவோம்.

எதிர்வீட்டு நபீஸா: நில்லு. நானும் குப்பை எடுத்துட்டு வர்றேன்.

பக்கத்து வீட்டு பாத்திமா : என்னா இவ்ளோ குப்பே! குப்பைத் தொட்டி நெறஞ்சு ரோட்டுலயும் கெடக்குது பாரேன்.

எதிர்வீட்டு நபீஸா: எல்லா பெண்களும் சேர்ந்து பஞ்சயாத்து போர்டு வாசல்ல குப்பையக் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்யனும்! அப்பத்தான் புத்திவரும்.

பக்கத்து வீட்டு பாத்திமா : சரியா சொன்னே,...... அப்படியாயிருந்தா நானும் வர்றேன். கடைசி வீட்டுல புள்ள பொறந்துரிச்சாம்ல!

எதிர்வீட்டு நபீஸா:ஆமாம் பெண் குழந்தையாம். வா போய் பாப்போம்.

பக்கத்து வீட்டு பாத்திமா: எந்த ஆஸ்பத்திரி?

எதிர்வீட்டு நபீஸா: நம்ம ஷிஃபா ஆஸ்பத்திரிலதான்.

பக்கத்து வீட்டு பாத்திமா: பட்டுக்கோட்டை, தஞ்சாவூருண்டு போறத்துக்கு இங்கேயே பார்த்திடலாம். இப்போ எல்லா வசதியும் வருதுல!

எதிர்வீட்டு நபீஸா: கடைசி வீட்டு ஜொகராமாக்கு பட்டுக்கோட்டையில ஆபரேசன் பண்ணுனுனாத்தான் பிள்ளை பிறக்கும்னு சொன்னாங்க ஆனா, இங்கே சுகப்பிரசவம் ஆயிருச்சு. அல்ஹம்து லில்லாஹ்.

பக்கத்து வீட்டு பாத்திமா: சரி அவ்வோ வந்தாச்சுண்டு நினைக்கிறேன். நான் போயிட்டு வர்றேன். நாளைக்கு வா ரெண்டு ஊட்டுக்கும் சீனி குடுத்துட்டு வருவோம்.

எதிர்வீட்டு நபீஸா: இன்ஷா அல்லாஹ் போகலாம். நாளைக்குப் பார்க்கலாம்.

ஆக்கம் : அதிரை எக்ஸ்பிரஸ்
பதிப்பு :சகோதரி மசூதா

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி