நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு தமிழக அரசு சார்பில் பச்ச அரிசி வழங்கி வருகிறது.
அதற்காக நாடு முழுதும் பள்ளிவாசல்களில் விண்ணப்பங்கள் அளித்துவரும் இவ்வேளையில் இந்தஅரிசியை வாங்கக் கூடாது என்றும் ஹராம் என்றும் சிலர் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிகிறது.
இதன் எதிரொலியாக தமிழ்மாநில ஜமா அத்துல் உலமா சபையின் துணைத் தலைவரும் சென்னை மாவட்ட தலைவருமான மன்னடி மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் தலைமை இமாம் ஒய் எஸ் எம் முஹம்மத் இல்யாஸ் காஸிமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் .
தமிழ் நாடு அரசு ரமலான் மாதம் நோன்பாளிகளுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக வழங்கி வரும் அரிசியில் நோன்புக்கஞ்சி தயாரிக்கலாம். இஸ்லாமிய சட்டப்படி அரசு வழங்கும் இந்த சலுகையினால் மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை .
எனவே தமிழ் மாநில பள்ளிவாசல் நிர்வாகிகள் ,முத்தவல்லிகள் , ஜமாஅத்தார்கள் தமிழக அரசு வழங்கும் இந்த சலுகைகளை பெற்று நோன்பாளிகளுக்கு பலனளிக்க வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்..
இந்த அறிவிப்பு வெளியிடும் பொழுது தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் ஏ. இ.எம். அப்துல் ரஹ்மான் உடனிருந்தார் .
பதிப்பு : அதிரை புதியவன்
நன்றி :அதிரை எக்ஸ்பிரெஸ்
நன்றி :அதிரை எக்ஸ்பிரெஸ்