தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் முகமது ஹனீஃப் கான் சாஸ்திரிக்கு தேசிய மதநல்லிணக்க விருதை வழங்குகிறார் குடியரசு துணைத் தலைவர் ஹமீ
புது தில்லி, ஜூலை 29: மதவாதமும், பயங்கரவாதமும் தேச ஒற்றுமைக்கு பெரும் சவாலாக இருக்கின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.தேசிய மதநல்லிணக்க விருது வழங்கும் விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் மன்மோகன் சிங் பேசியது:நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பெரும் சவாலாக உள்ள மதவாதம், பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். சில விஷமிகள் நம்மிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.அவர்களை நாம் ஒதுக்க வேண்டும். அந்த விஷமிகள் குறித்து நாட்டு மக்கள் அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.பல நூறு ஆண்டுகளாக பல்வேறு மதத்தினரும் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இடம் நமது நாடு. அந்த ஒற்றுமை சீர்குலைய அனுமதிக்கக் கூடாது என்றார்.உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.2009-10-ஆம் ஆண்டுக்கான தேசிய மதநல்லிணக்க விருதுகளை குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி வழங்கினார்.எழுத்தாளர் முகமது ஹனீஃப் கான் சாஸ்திரி, ராஜஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் சமூக நல மையம், சமூக சேவகர் ஆச்சாரியா லோகேஷ் முனி ஆகியோருக்கு தேசிய மதநல்லிணக்க விருது வழங்கப்பட்டது.விருது பெற்ற கான் சாஸ்திரி, சம்ஸ்கிருதத்தில் புலமை பெற்றவர். இந்து - முஸ்லிம் மதத்துக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.1996-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதில் சான்றிதழும், ரொக்கப்பரிசும் அடங்கும்.
நன்றி :தினமணி