26 ஜூலை 2011
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா தோல்வி!
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள், ஒரு T20 போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒரு டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 21 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. பீட்டர்சன் அடித்த இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிரையர் 71 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் பந்து வீச்சாளர் பிரவீன் குமார் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. டிராவிட் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார். மயிரிழையில் பாலோ ஆனிலிருந்து தப்பியது இந்திய அணி. தமது இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த போதும் பிரையர் மற்றும் பிராட்டின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
457 ரன்கள் என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்து இருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி ஆண்டர்சனின் பந்து வீச்சை சமாளிக்க இயலாமல் 261 ரன்களுக்கு ஆட்டமிழந்து 196 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆண்டர்சன் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இரட்டை சதம் அடித்த பீட்டர்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப் பட்டார்.
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி 2000 வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி :இநேரம்.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி