
ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமரைச் சிக்க வைக்கும் எண்ணம் இல்லை என்று கூறிய தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா இன்றும் பிரதமர் மீது தாக்குதல் தொடுத்தார்.
ஸ்பெக்ட்ரம் குறித்த வழக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, ஸ்பெக்ட்ராம் குறித்த கோப்புகள் ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்திருந்தால் அமைச்சரவைக் குழுவை அமைத்திருக்கலாமே..? ஏன் அதை அவர் செய்யத் தவறிவிட்டார்..? என ராசா கேள்வி எழுப்பினார்.
முன்னதாக இவ்வழக்கில் பிரதமரையோ மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தையோ சிக்க வைக்கும் எண்ணம தமக்கில்லை என்றும் ஊடகங்கள்தான் இதை பெரிதுபடுத்தி விட்டன என்றும் ராசா தெரிவித்திருந்தார்.
அதே சமயம் ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று இன்றைய வாதத்தின்போது ராசா வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் சாட்சியாக விசாரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்றும் ராசா தனது வாதத்தின்போது மேலும் கூறினார்.
நன்றி :இநேரம்.com