"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
05 ஆகஸ்ட் 2011

துபாயில் இஃப்தார் -பேச்சுலர்கள் பாகம் - 3

0 comments



துபாயில் பேச்சிலர்களின் வாழ்க்கை பாகம் - 1

துபாயில் பேச்சிலர்களின் வாழ்க்கை பாகம் - 2


நோன்பு காலம் வந்துவிட்டால் துபாயில் வேலை நேரம் அரை நாள் தான்.
வேலை முடிந்ததும் பேச்சுலர்கள் ரூமில் நன்கு ஓய்வெடுத்து கொண்டு பிறகு மாலை இஃப்தாருக்கு ரெடி பண்ணுவார்கள். ஆனால் காலை சஹருக்கு தான் சில பேச்சிலருக்கு சிரமமாக இருக்கும். சமைக்கும் பேச்சுலர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கஞ்சி செய்வதும், பழவகைகளை கட்பண்ணுவதும், பகோடா வடை போன்றவைகளை செய்வதுமாய் எபப்டியும் 15 பேர் சேர்ந்து ஒன்றாக செய்து சாப்பிடுவாகள்.



சஹருக்கு தான் பெரும்பாலும் சமைக்க வேண்டிவரும், முன்பெல்லாம் சமைத்து சாப்பிடுவார்கள், இப்ப அங்கேங்கே மெஸ் வந்துவிட்டது. மெஸ்ஸில் ஆர்டை கொடுத்து விட்டால் இரவு 2 மணிக்கு சாப்பாட்டை கதவில் மாட்டிவைத்து விட்டு போய் விடுவார்களாம்/


மாலை நோன்பு திறக்கும் போது கவலையே இல்லை இங்குள்ள எல்லாபள்ளிகளிலும் ,பழங்கள், பேரிட்சை, மந்தி ரைஸ் என்னும் அரபி சாப்பாடு, அரபி பிரியாணி, ஜூஸ் வகைகள் , ஹரீஸ் (அரபிகளின் கஞ்சி) காரம் ஏதும் இருக்காது வெரும் கோதுமையும் சிக்கனும் மட்டுமே சேர்த்து செய்து இருப்பார்கள். இதே எல்லா பேச்சிலர்களுக்கும் போதுமானது.

வாரம் ஒரு நாள் வெள்ளி விடுமுறையில் எல்லாபேச்சிலர்களும் 35 பேர்.50 பேர் கூடி பெரிய இஃப்தார் பர்டியும் வைத்து கொள்வார்கள்.
என்ன தான் இருந்தாலும் ஊரில் அம்மா கையால் நோன்பு கஞ்சியும் , வடையும் சாப்பிட்ட மாதிரி வராது என்று ஏங்கும் பேச்சிலர்கலும் உண்டு.

ஊரில் பள்ளிவாசலில் கிடைக்கும் நோன்பு கஞ்சியின் ருசியே தனிதான், ஊர் போல் இங்கும் பஜாரில் குவைத் பள்ளிகளில் நோன்பு கஞ்சி கொடுக்கிறார்கள் என்று கேள்விபட்டேன்.



ஆபிஸில் உள்ளவர்களுக்கு ரொம்பவே சொகுசு நல்ல ஓய்வு கிடைக்கும். அதிலும் அரபிகள் கேட்கவே வேண்டாம்.ஆனால் சேல்ஸில் வேலை செய்பவர்கள் வெளியில் வெயிலில் அலைந்து தான் ஆகனும்.
வெளியில் கட்டட வேலை செய்பவர்கள்,சாக்கடை அள்ளுபவர்கள் ,குப்பை பொருக்குகிறவர்கள் , குராசரி ஷாப் வேலை ஆட்கள் இவர்கள் பாடுதான் திண்டாட்டம்.





இன்னும் பெரிய பெரிய அரபி வீடுகளில் தினமும் சாப்பாடு கப்சா, மந்தி ரைஸ் , பழவகைகள் , ஜூஸ் எல்லாம் மாலை நேரம் எல்லோருக்கும் கொடுப்பார்கள் அதை வாங்க ஒரு கியு நின்று வாங்கி செல்வார்கள்.







கடைகளிலும் வடை, பஜ்ஜி, சுழியம், சமோசா , இனிப்புவகைகள் என பல அங்காங்கே வெளியில் கடை போட்டு விடுவார்கள், இஃப்தார் பஃப்பட் களும் எல்லா ஹோட்டல்களிலும் போர்டு தொங்க விட பட்டிருக்கும்.தேவையானவர்கள் வாங்கிக்கொள்வார்கள். டேரா பஜார் ஜே ஜேன்னு இருக்கும்.







வெளியில் வாங்கி சாப்பிடுபவர்கள் பார்த்ததும் எத வாங்குவதுன்னு தெரியாம அதிகமாக வாங்கி எல்லாம் வீணாக்குவதும் தேவைக்கு தகுந்த மாதிரி வாங்கிக்கொள்ளுங்கள்.
இங்கு கடையில் விற்கும் பண்டங்கள் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும் அதுவும் இல்லாமல் நோன்பு நேரம் அவ்வளவா ஏற்காது,

ஜூஸ் வகை நிறைய குடிங்க , தாகத்தை தணிக்கும் தர்பூசனி நிறைய வாங்கி சாப்பிடுங்கள்.

இங்குள்ள பேச்சிலர் என்றில்லை உலகத்தில் உள்ள எல்லா பேச்சிலர்களும் இப்படி தான் என்று நினைக்கிறேன்.
**************************************************************************
என் பையனும் இப்ப ஹாஸ்டலில் இருக்கிறான் , முதல் வருடம் ரொம்ப அழுது கொண்டு இருந்தேன். அவனுக்கு நோன்பு சஹருக்கு சாப்பாடு கிடைக்க வில்லை.வெரும் பன் நும், இங்கிருந்து நாங்க அனுப்பிய பேரிட்சை மட்டும் தான் சாப்பிட்டான், இஃப்தாருக்கு வெளியில் ஜூஸ் சமோசா என்று வாங்கி சாப்பிட்டு கொண்டான்.
நான் இங்கு அழுது கொண்டே இருந்தேன் அந்த ரமளான் முழுவதும் சரியா சமைக்க கூட இல்லை வாயில் சாப்பாடு வைக்கும் போதெல்லாம் அழுவேன்.
அப்ப தான் எங்க டாடிக்கிட்ட சொல்லி அழுதேன். அதுக்கு டாடி “ நீ பேசாம இரு அவனுக்கு கிடைப்பது கிடைக்கும். அவனை நினைத்து அங்குள்ள சின்னவனுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒன்றும் செய்து கொடுக்காம இருந்த எப்படி ? ரிஸ்க் - உணவளிப்பவன் அளிப்பவன் அல்லா அவரவருக்கு உண்டான ரிஸ்கை அவன் நியமித்தபடி தான் கிடைக்கும். இப்படி அழுவதை விட்டு விட்டு நல்ல ரிஸ்க் கிடைக்கனும் என்று துஆ கேளு அது போதும் என்றார்கள்.
இப்ப எங்க டாடியும் இல்லை ஞாபகம் ஓவ்வொரு நினைவிலும் ஓவ்வொரு பேச்சிலும் எங்க டாடி தான் நிற்கிறார்கள், இன்னும் என்னால் மறக்க முடியல,
நோன்புகாலங்களில் தரவீஹ் தொழ போகுமுன் டாடிக்கிட்ட பேசிட்டு தான் போவேன்.இப்பவும் அவ்வளவா ஏதும் செய்ய முடியல முடிந்ததை செய்து கொள்கிறேன்.
பிறகு நானும் டாடி சொன்ன படி துஆ கேட்டேன், இப்ப பையன் இரவும் அங்கு பால் பழம் அரேஞ் பண்ணி கொடுக்கிறார்கள். இவனும் கொஞ்சம் வாங்கி வைத்து கொள்கிறானாம், மாலை இஃப்தாருக்கு மஸ்ஜீதில் (பள்ளியில்) எல்லாரும் சேர்ந்து நோன்பு திறக்க தேவையானவைகளை அரேஞ் செய்து சாப்பிடுகிறார்களாம்.அப்படியே தராவீஹ் தொழுகையும் முடித்து வருகிறானாம். பக்கத்தில் உள்ள ஹோட்டலிலும் இப்ப தோசை, பிரட் ஆம்லேட் கிடைக்குதாம் .அல்ஹம்து லில்லாஹி சுக்குர்.ஆண்டவனுக்கு நன்றி சொல்லி கொண்டேன்.

நன்றி : சமையல் அட்டாகசங்கள் ...


டிஸ்கி : இங்குள்ள எல்லா பள்ளிகளிலும் தரவீஹ் தொழுகை நடக்கும். ஹோர்லன்ஸ் பள்ளியில் வேலை முடிந்து லேட்டா வருகிறவர்களுக்கும் தனியாக தொழ வைக்கிறார்கள் என போன வருடம் கேள்வி பட்டேன். இந்த பதிவு பாதி முன்பே எழுதிவைத்திருந்தது இப்ப முடிச்சாச்சு....

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி