தேவையான பொருட்கள்
மட்டன் = ஒரு கிலோ
milaku-kari.jpg
வறுத்து பொடிக்க....
மிளகு நான்கு தேக்கரண்டி
சீரகம் - இரண்டு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை இரண்டு இன்ச் அளவு ஒன்று
கிராம்பு நான்கு
ஏலம் முன்று
தாளிக்க....
வெங்காயம் நான்கு பெரியது
தக்காளி முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் இரண்டு மேசைகரண்டி
உப்பு - தே.அளவு
மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
தனியாத்தூள் இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணை ஆறு தேக்கரண்டி
பச்ச மிளகாய் முன்று
செய்முறை
1.மட்டனை நன்கு கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.
2. குக்கரில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
3. பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போனதும் தக்காளி, பச்சமிளகாய், உப்பு, கொத்து மல்லி கீரை போட்டு வதக்கவும்.
4. மிளக்காய் தூள், மஞ்சதூள், தனியாதூள் சேர்த்து வதக்கி மட்டனை சேர்த்து நன்றாகக் கிளறி பொடித்து வைத்துள்ள் பொடியை சேர்த்து ந்ன்கு கிளறவும்.
5. கொஞ்சமா தண்ணீர் வீட்டு மூன்று விசில் விட்டு இரக்கவும்.
6. இரண்டு பத்தை தேங்காய் அரைத்து ஊற்றி கொத்திக்கவிட்டு இரக்கவும் தேவைபட்டால் தேங்காயுடன் சிறிது முந்திரியும் வைத்து அரைத்து ஊற்றலாம்.
7. சூப்பர் பெப்பர் மட்டன் கிரேவி ரெடி. சும்மா சுள்ளுன்னு இருக்கும்.
குறிப்பு:
இது குழம்பு போல் இல்லாமல் கிரேவியா இருக்கனும் என்பவர்களும்.காரம் அதிகம் தேவைபடுவர்களும் தேங்காய் சேர்த்துகொள்ள வேண்டாம்.
இது பிரட் ரைஸ், பிளெயின் ரைஸ், ரொட்டி போன்றவைகளுக்கு மிகவும் ருசியாக இருக்கும்.
பனி காலங்களில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். சளி, ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க வாரம் இரு முறை செய்ய்யலாம். தொண்டைக்கு இதமாக இருக்கும்.
ஆக்கம் : சகோதரி ஜலீலா
நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்