"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
15 ஆகஸ்ட் 2011

உள்ளாட்சி தேர்தலும் ஊர்சுத்தி காக்காவின் கவலையும் ...

0 comments

வாங்க காக்கா எங்க ஆளையே காணோம்?

என்னா தம்பி எவ்ளோநாள்தான் 'ஊர்சுத்தி'கிட்டு ஈக்கிறதுன்னு. அப்டியே துபாய் பக்கம் ஒரு விசிட் போயிட்டு வந்தேன். சும்மா சொல்லக்கூடாது துபாய், அமெரிக்கா மாதிரி ஈக்கிது.

என்னா காக்கா சொல்றிய? துபாய் அமெரிக்கா மாதிரி ஈக்கிதா? எப்புடி?

ஆமாம் காதரு. பெரிய பெரிய கட்டடங்கள்.சொகுசான போக்குவரத்து.பஸ் ஸ்டாப்லகூட ஏசி வச்சிருக்காங்கன்னா பாத்துக்கவேன். ரயில்ல போறது ப்ளைட்டுல போறதவிட அருமையா ஈக்கிது. நம்ம ரயில்வே ஸ்டேசன்ல நாய் கட்டுர சங்கிலில அலுமினிய கொவலையக் கட்டி வச்சிருப்பாங்க. அங்க அதெல்லாம் இல்லே.என்னா கஷ்டம்னா அங்க பஸ்ஸு ரயிலுல வேட்டி உடுத்திக்கிட்டு போனா மேலயும் கீழயும் பார்ப்பாங்க.

காக்கா! கேக்கவே சூப்பரா ஈக்கிது. தெரியாமத்தான் கேக்கிறேன். நம்ம ஊரு வேட்டிக்கு என்ன கொறைச்சல்?

அடேய் காதரூ.கொறைச்சல் ஒன்னுமில்லேடா! நாம உடுத்துற வேட்டியத்தான் அரபிக்காரவங்க உள்ளாடையாக உடுத்துறாங்க!

என்னா காக்கா சொல்றிய? நம்மட வேட்டி அரபியலுவோளுக்கு அண்டர்வேரா? கொஞ்சம் புரியும்படியாத்தான் சொல்லுங்களேன்.

அதாவதுடா.அரபுக்காரவங்க நம்ம கொத்பாபள்ளி இமாம் போட்டுக்கிறமாதிர் வெள்ளை உடை உடுத்துவாங்க. அத போடும்போது நம்ம வேட்டிய உடுத்தி அதுக்குமேல பனியன இன் பண்ணாம போட்டுகிட்டு,அதுக்குமேல தோப்பு போடுவாங்க. அதத்தான் நம்ம வேட்டி அவங்களுக்கு உள்ளாடைன்னு சொன்னேன்.

அது என்னமோ காக்கா நமக்கு தெரிஞ்சது தென்னந்தோப்புதான்! அதுசரி காக்கா தலப்பொறைக்கு அங்கதானே ஈந்திய. கஞ்சி கெடைக்காம செரமப்பட்டிருப்பியலே?

அதெல்லாம் ஒண்ணும் சிரமமில்லேடா. டேராவ்ல குவைத் பள்ளின்னு ஒன்னு ஈக்கிது. அங்க நம்ம ஊரு கஞ்சி கெடைக்கிது.கோட்டை பள்ளிக்கிட்ட நம்ம ஊரு புள்ளையலுவோ சம்சா போட்டு ரூமுல விக்கிறாங்க. வாடாகூட போனவருசம் கெடச்சுச்சாம். இப்ப யான் விக்கலேன்னு தெரியலே. அப்புறம் மத்தமத்த பள்ளியள்ள பிரியாணி, அரீஸ் இன்னும் என்னென்னமோ குடுக்குறாங்கடா.நான் கேள்விப்பட்ட வரையில் நோம்பு தொறக்குறதுல சவுதிய அடிச்சுக்க முடியாதாம்!

அப்பறம் என்னா காக்கா துபாய்ல சுத்திப்பாத்திய?

யாண்டா நான் என்னா சுத்திப்பார்க்கவா போனேன்? எதாச்சும் வேலைகீல கெடைக்குதான்னு பார்க்கலாம்னுதான் போனேன். அப்பப்பா என்னா வெயிலு தெரியுமா காதரு? சரி ஊர் நெலவரம் எப்புடிடா ஈக்கிது? கஞ்சி குடிக்க எந்த பள்ளிக்குப் போவ்றா?

கஞ்சிக்காக ரிஸ்க் எடுக்கிறதில்லேகாக்கா.எல்லா பள்ளியிலயும் கஞ்சி நல்லா ஈக்கிது.கவ்ருமெண்ட் அரிசி சில பள்ளிவாசல்களுக்குக் கெடக்கலையாம். இது பத்தி யாராச்சும் நடவடிக்கை எடுத்தா தேவலை.

உள்ளாட்சி தேர்தல் வரப்போவுதே. மெம்பர்லாம் எப்புடி ஈக்கிறாஹ?பழைய மெம்பர்களுக்கு சான்ஸ் கெடைக்குமா?

இந்தவாட்டி கொஞ்சம் போட்டி ஈக்கிம்னு நெனைக்கிறேன்.இதுவரை ஒழுங்கா வேலை செஞ்ச மெம்பர்களுக்கு சான்ஸ் இல்லாம இல்லே. சேர்மன்,துணை சேர்மன் போஸ்டுக்குத்தான் பெரும் போட்டி ஈக்கிம்னு பேசிக்கிறாங்க.

யாண்டா காதரு! என்னமோ சங்கம் ஒவ்வொரு வார்டுக்கு ஆள நிறுத்தும்னு மின்னாடி பேச்சு அடிப்பட்டுச்சே?

அதுபத்தி இன்னும் தெளிவான முடிவு எதுவும் வெளியாவலே. இந்தவாட்டி மனிதநேய மக்கள் கட்சி சார்பா சேர்மனுக்கு போட்டி ஈக்கிம்னும் பேச்சு அடிபடுது. ஆளுன்ம்கட்சி கூட்டணிங்கறதாலயும் முஸ்லிம்கள் அதிகமுள்ள ஊருங்கறதாலயும் மமகவுக்கு வாய்ப்பு இல்லாம இல்லே.

காங்கிரஸ்+டி.எம்.கே குரூப்புக்கு சான்ஸ் எப்டி ஈக்கிது. நம்மூரு காங்கிரஸ்ல சாச்சா ஈந்த வரைக்கும் பெரச்சினையில்லே.இப்ப யாரும் சொல்லிக்கிற மாதிரி இல்லேங்குறது மைனஸ் பாயிண்ட்!

மேல்மட்டத்துல டி.எம்.கே - காங்கிரஸ்ல புகைச்சல் இருப்பதால இந்தமுறை டி.எம்,கே அனேகமாக தனிச்சு நின்னாலும் நிக்கிம்.அப்டி ஒரு நெலம வந்தா இராம.குணசேகரன் சேர்மனுக்கு நிப்பாரான்னு தெரியலே.நான் விசாரிச்சவரை அவருக்கு துணை சேர்மன் போஸ்டே போதும்னு நெனைக்கிறாராம். ஏன்னா வார்டு எண்ணிக்கையில் சேர்மனுக்கு நிக்கிற அளவுக்கு ஆதரவு கொஞ்சம் கம்மிதான்.

இப்ப என்னாதாண்டா சொல்றா? மமக-காங்கிரஸ் போட்டி வந்தா அதுக்கு ஈடுகுடுக்க சங்கம் நிறுத்தும் ஆட்களால முடியுமா?

காக்கா...! இன்னும் எதுவுமே முடிவாகலே. மொதல்ல நம்ம முஹல்லா ஜமாத் எல்லாம் மசூரா செஞ்சு அனைத்து ஜமாத் கமிட்டி அமைக்கனும். அப்புறம், எதாச்சும் கட்சிக்கு ஆதரவா இல்லே ஜமாத் முடிவுப்படி அன்னபோஸ்டான்னு முடிவெடுக்கனும். இன்னும் 2-3 மாசம்தான் ஈக்கிது அதுக்குள்ள இதைலாம் யாரு நின்னு செய்யப்போறாஹன்னு தெரியலே.

பக்கத்து ஊரு முத்துப்பேட்டைலைலாம் தெளிவான முடிவுல ஈக்கிறான்னு கேள்வி. ஊரே முடிவு செஞ்சு ஒருத்தர மட்டுமே சேர்மனுக்கு நிக்க வைக்கப் போறதா கேள்வி. நமக்கு எங்கே அதுக்கெல்லாம் கொடுப்பினை ஈக்கிது? நான் பெரியவனா? நீ பெரியவனாங்கற போட்டில நீங்க யாருமில்லேன்னு வேற யாராச்சும் வர்ரதுக்குள்ளே நல்ல முடிவா எடுத்தா சரி. வா..மஹ்தூம் பள்ளில போயிநோம்பு திறப்போம்.அப்டியே வழில ஆளுக்கு ரெண்டு சம்சா வாங்கிட்டு போவலாம். இந்தா அச்சுருவா!

ஹ்ஹெஹே...காக்கா அதுக்குள்ள ஊரு நெலமய மறந்துட்டியலே. ஒரு சம்சா நாலு ரூவா! இன்னொரு அஞ்சுர்வா குடுங்க.இல்லாட்டி ரெண்டு வாடாவ வாங்கிடவா?

எதாச்சும் வாங்கிட்டு வா.நான் போயி எடம்போட்டு வக்கிறேன்.வெரசா வா!

இப்படிக்கு,

www.ஊர்சுத்தி.காம்
படம்: ஜாகிர் ஹுசைன்
நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி