ஒவ்வொரு வருடமும் புனித பயணம் மேற்கொள்ளும் தமிழக ஹாஜிகள் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வருகின்றனர். இதானால் அவர்களுக்கு ஏராளமான சிரமங்கள் ஏற்படுகின்றன. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு திருச்சிராப்பள்ளி மையமாக உள்ளது
இந்த பகுதி மக்கள் அதிக பட்சமாக 3,4 மணிநேரங்களில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தடைந்து விடலாம்.
இதானால் ஹாஜிகளுக்கு பொருளாதாரம் விரயம், வீண் அலைச்சல் வெகுவாக குறைக்கப்படும். பொதுவாக ஒரு ஹாஜியை வழியனுப்ப குடும்பத்தினர் அனைவரும் விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வருகின்றனர்.
இதானாலும் ஏராளமான பொருளாதார விரயம் ஏற்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். புனிதப் பயணம் புறப்படும் முன், ஹாஜிகள் ஓய்வு பெறுவதற்காக "ஹஜ் ஹவுஸ்' எனப்படும் இல்லம் ஒன்றை அமைத்து திருச்சியிலிருந்து நேரடியாக ஜித்தாவிற்கு விமானங்களை இயக்க வேண்டும். இதனால் பெண்கள் முதியவர்கள் அனைவரயும் சிரமமின்றி வழியனுப்ப வாய்ப்பாக அமையும்.
எனவே தமிழக ஹஜ் கமிட்டி தென் தமிழக ஹஜ் பயணிகளுக்கு திருச்சியிலிருந்து விமானங்களை இயக்க ஆவன செய்ய வேண்டும் என அதிரையின் ஹஜ் பயணியான அஹமது கபீர் கூறினார்.
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்