புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானது. அல்லாஹ்வின் அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர்கள், தோழர்கள், தோழியர்கள், அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!(ஆமீன்)
அல்லாஹ் உன்னை தொழுக அலைக்றான்...
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
ஆஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
ஆஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
ஆஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
ஆஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்),
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்
அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர்
லா இலாஹ இல்லல்லாஹு ...
எதிர்வீட்டு நபீஸா: நோன்பு தொரந்திட்டியா காக்கா பாங்கு சொல்லியாச்சு தொழுக போ...
நபீஸா காக்கா : சரி தொழுதுட்டு வார்ரேன்
இனிமையான குரல்லில் மோதினார்(சாபு)இக்காமத்து சொல்ல! தொழுகையும் முடிஞரிச்சி,
நபீஸா, காக்கா :அஸ்ஸலாமு அலைக்கும்
ஹஜ்ரத் :வ அலைக்கும் ஸலாம்,,,!!! நீ எங்கே இருந்தே
நபீஸா காக்கா :நான் சவூதியில் இருந்தேன்
ஹஜ்ரத் :நல்ல சுகமா இருக்கிறியா,வாப்பா எங்கே
நபீஸா காக்கா :வாப்பா வீட்டிலேதான் இருக்காங்க
வெளிய எங்கயும் போறதில்லை வீட்டிலேயே
தொளுதுக்கிட்டு ஓதிக்கிட்டு இருக்காங்க,... மதர்ஷாள எல்லா ஹஜிரத் நல்லா இருக்காங்களா
ஹஜ்ரத் :அல் ஹம்ந்தில்லாஹ் எல்லோரு நல்ல இருக்காங்க
நபீஸாகாக்கா :யாரும் நம்ம ஊரு மதர்ஷால இந்த வருடம் ஆலிம் பட்டம் வாங்கினாங்ளா?..
ஹஜ்ரத் :அட என்னாங்க நீங்க! இப்போ வெளி மாநில மாணவர்கள் அதிகமாக வந்து ஓதி (ஆலிம்)பட்டம் வாங்கிட்டு போறாங்க,நம்ம உரு பிளைங்கள் யாரும் வர்ற மாதிரி தெரியலை
நபீஸாகாக்கா : என்னா ஹஜ்ரத் சொறிங்க...
ஹஜ்ரத் :இப்போ எல்லாம் நம்ம ஊருள உலக கல்விலே தான் அதிகம் ஆறுவம் காட்டுறாங்க,நோன்பு வந்தா மட்டும் பள்ளிவாசல் சைடு வர்றாங்க,நோன்புக்கு அப்பறம் யாரையும் பாக்க முடியாது
நபீஸா காக்கா :அப்படியா,,,!!!
ஹஜ்ரத் :என்னா வாயே போலந்திடிங்க, இப்போ யெல்லாம்
உம்மா,வாப்பா பிள்ளைகள், என்னா ஆசைப் படுதோ அதேதான்
நிறைவேற்றி வைக்கிறார்கள்
நபீஸா காக்கா :ஆமாம் அவங்களும் சொன்னா தானே பிள்ளைகளுக்கு புரியும்,துஆ செயிங்க ஹஜ்ரத்
ஹஜ்ரத் :இன்ஷால்லாஹ்,,,
நபீஸா காக்கா :என்னுடைய மகனே இந்த வருடம் மதர்ஷால சேர்த்துவிடுறேன்
ஹஜ்ரத் :பரவாயில்லையே சொன்னதும் உடனே புரிஞ்சிக் கிட்டியே,
நபீஸா காக்கா :யெல்லாம் அல்லாஹுடைய நாட்டம் ! போயிட்டு வர்றேன்.
ஹஜ்ரத் : சரி நீங்கே எல்லத்தையும் பாத்திங்கல்ல எப்போ உங்க பிள்ளைகள மதர்ஸால சேக்குறது ???...........
நபீஸா காக்கா : யாரு கவாப் கடைலே நிக்கறா, அட நம்ம ஹாஜாவா நிக்குறது,என்னா மச்சான் நல்லா இருக்குரியா
ஹாஜா :வா மச்சான் நான் நல்ல இருக்குறேன்,நீ நல்லா இருக்குரியா,எப்போ வந்தா,கவாப் சாப்புடு,கடை காரரே ஒரு ப்ளேட் கவாப்
நபீஸா காக்கா :அல் ஹம்தில்லாஹ் நல்லா இருக்குறேன் மச்சான்,ஆட்டோ எப்படி ஓடுது ,ஒரு நாளைக்கு எல்லாம் போக எவ்வோளது மிச்சம் வருது
ஹாஜா : என்னா ஒரு நாளைக்கு எல்லாம் போக ஐநுறுபாய் மிஞ்சும்
நபீஸா காக்கா :அதுசரி,பரவாயில்லையே ஒரு மாசத்துக்கு பதினையாயிரம் ரூபாய் சம்பாரிக்கிரியே,தொளுதிட்டியா
ஹாஜா : ம் இப்ப தான் தொழுதுட்டு வந்தேன், உனக்கு எவ்வோலவுது மச்சான் சம்பளம்
நபீஸா காக்கா :நம்ம ஊருக்காசுக்கு இருபத்தி
ஐயாயிரம் ரூபாய் தருவாங்க,எல்லாம் செலவு போக பதினையாயிரம் ரூபாய்தான் மிஞ்சும்
ஹாஜா :உனக்கு எவ்வோளது மிஞ்சுமோ அதான் எனக்கும் மிஞ்சும், அதான் மச்சான் நான் இங்கேயே இருந்துட்டேன், அதுமட்டுமா எங்க உம்மா,வாப்பா வயசானவோலா இருக்குரகளா,நான் ஊருலே இருக்குறது அவ்வோளுக்கு ரோம்ப உதவியா இருக்குது,
நபீஸா காக்கா :என்னா செய்யுறது எனக்கு முனும் பொம்பளைப் புள்ளையா போச்சே, அதான் மச்சான் எல்லாரையும் விட்ட்டு கடல் தாண்டி
மன உடைச்சளுடன் ஐயள் நாட்டுக்கு பொய் சம்பாரிக்கிற நிலைமையைப் போச்சு
ஹாஜா :அடே இதுக்கு தான் இவ்வோளது கவலையா இருக்குரியா,வெளிநாடுலேந்து வந்த சந்தோசம் ஒன்னையும் ஒன்னுடைய முகத்துல காணம்,மச்சான் கவலை படாமே ஊருளையே சம்பாரிக்க வழியே பாரு
நபீஸா காக்கா : நீ சொற்றது சரிதான் என்னா தொழில் பண்ணுறது
ஹாஜா : எனக்கு ஆட்டோ ஒட்டுரதுலே அறுவம்மா இருந்துச்சு அதான் ஆட்டோ ஓட்டுறேன், உனக்கு எதுலே ஆருவம் இருக்குதுண்டு பாரு,எதாச்சும் ஒரு தேரமே உன்ட்டே இருக்கும் அதை வச்சு சம்பாரிக்க வழியே பாரு மச்சான்
நபீஸா காக்கா :நீ சொற்றது சரி தான்,
நான் திரும்ப சவூதிக்கு போவாமே இங்கே
போட்டிக் கடையாவது வைக்கலாமா மச்சான்
ஹாஜா : அதே சைடா இருக்கட்டும், வேறே ஐடியா பாரு, நானும் யோசனை பண்ணிட்டு சொற்றேன், இரண்டு ப்ளேட்டு கவாப்புக்கு எவ்வோளவு கட காரரே, இந்தாங்க அம்பதுரூபா,...