"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
30 ஜூலை 2011

புள்ளபெத்த ஊடு, கல்லுவச்ச புருக்கா மற்றும் சில... (நம்ம ஊரு பாசையில் நாட்டு நடப்புகள் - அர்த்தமுள்ள அரட்டை - 2

0 comments

அர்த்தமுள்ள அரட்டை-1 ஐ நெறயபேர் பாராட்டி எழுதி இருந்தாஹ. ரொம்ப சந்தோசம். இதில் உள்ள பெயர்கள் யாரையும் குத்திக் காட்டுவதற்காக அல்ல. இந்த அரட்டை தமிழக அரசுக்கும்+மக்களுக்கும் நல்ல முறையில் சென்று அடைந்தால்தான் அர்த்தமுள்ள அரட்டையாக இருக்கும். இதில் உள்ளவை சில உண்மைச் சம்பவங்களும் வரலாம். நீங்கள் தொடர்ந்து ஆதரவு தந்தால் நேரம் கிடைக்கும்போது எழுதி அனுப்புறேன்.

பக்கத்து வீட்டு பாத்திமா: உம்மா கொல்லைக் கதவே பூட்டிக்க. மொவன் வருவாப்புலே டீ ஊத்தி ஆற வச்சிருக்கேன். குடிச்சிட்டு, பள்ளிக்குப் போயி ஓதிட்டு வரச்சொல்.

பாத்திமாட உம்மா: பாத்துமா சோமது (சேக் முஹம்மது) எதோ பணம் கேக்கச் சொன்னாப்புலே (ஏதுக்காம்?)

பாத்திமா:அடியா மறந்துட்டேன். இந்தாமா 200 ருவாய். அவ்வோ தோழனுக்கு ஏலலை(உடல் சுகமில்லை)யாம். போய் பாத்துட்டு பழங்கள் வாங்கிக் கொடுக்கச் சொன்னேன். போயிட்டு வரட்டும். நானும் எதிர்வீட்டு நப்ஸாமாவும் கடைசிவுட்டு ஜொகராவ பார்த்துட்டு சீனி கொடுத்துட்டு வந்துடுறோம். ஊட்ட பாத்துக்கமா. கதவ பூட்டிவையி. அங்கங்கே கள்ளன் பொரலியா ஈக்கிது.

பக்கத்து வீட்டு பாத்திமா: நபீஸா!!!...... போவலாமா! துப்பட்டி போடப்போறியா புர்காவா?

எதிர்வீட்டு நபீஸா: துப்பட்டி நீலம் போடலே. புர்காதான் போட்டுகிட்டு வரப்போறேன். கொஞ்சம் நில்லு மஹ்ரிப் தொழுதுட்டு அப்புடியே அப்பாவுக்கும் துஆ கேட்டுட்டு வர்றேன்.

பக்கத்துவீட்டு பாத்திமா: சரி சீக்கனம் கெளம்பு. புர்கா யான் தகதகன்னு மின்னுது? இது என்னமா கல்லு கல்லா ஜொலிக்கிது? சொல்றேன்னு தப்பா எடுத்துகிடாத. இதெல்லாம் நல்லா இல்ல? துப்பட்டி மங்கலா ஈந்தாலும் பரவாயில்ல. அழுக்கா இல்லாட்டி அதயாச்சும் போட்டுக்கிட்டு வா. மால மஹதி நேரந்தானே யாரும் பார்க்க மாட்டாஹ.

எதிர்வீட்டு நபீஸா: நாங்கூட இதத்தான் பாத்திமா நெனச்சேன். நல்லவேல சொல்லிட்டிய. பட்டுக்கோட்டைக்கி போறதா இருந்தா புருக்கா வசதியா ஈக்கிதேன்னு அவ்வொல்ட (கணவன்) அனுப்பச் சொன்னேன். இப்புடி கல்லு வச்சத வாங்கி அனுப்பிட்டாக. எங்கம்மாகூட யான்டி இத வாங்கச் சொன்னான்னு திட்டுனாஹ. வா பாத்திமா சீக்கிரம் போய்ட்டு வந்துடுவோம். என் மகள் வீட்டு பாடாம் (home woork) எழுதிக்கிட்டு இருந்தா. கொல்ல பக்கமா வந்துட்டேன்.

பக்கத்து வீட்டு பாத்திமா: சரி வா, வீட்டு பாடம்டதும் யாஹ்வம் (ஞாபகம்) வருது. என் காக்கா மொவன் மெட்ராஸ்ல இங்லீஸ் மீடியம் ஸ்கூல்ல மூனாவதுதான் படிக்கிறான். a,b,c,d எழுத்த சேர்த்தாப்புல எழுத சொல்றகலாம் (Cursive Writing). சின்ன வயசுலேயே பிள்ளைகளுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு.

எதிர்வீட்டு நபீஸா: படிக்கிறதுன்னா சும்மாவா? அப்டி இப்டிதான் இருக்கும். என் மகளுடைய தோழிய டீச்சர் நல்லா முதுவுல ஸ்க்கேலால அடிச்சாகலாம். அந்தப் புள்ள அவ்வோ உம்மாட்ட சொல்லி அழுவுனுச்சாம். வேற ஸ்கூல்ல சேர்க்கப் போறாகலாம்.

பக்கத்து வீட்டு பாத்திமா: இப்பவல்லாம் யாரும் அடிக்கிறது இல்லேன்னு சொல்றாங்க. UKG க்கு டீச்சர் இல்லேன்னு பத்தாம் கிளாஸ் டீச்சர கிளாஸ் எடுக்க சொல்லியிருக்காங்க. அவ்வோளும் பெரிய புள்ளயல்ட்ட நடந்துகிறமாதிரி நடந்துகிட்டாங்க. அந்தந்த கிளாஸுக்கு அந்தந்த பயிற்சி பெற்ற டீச்சரப் போட்டாதான் இதுமாதிரி பெரச்சனைலாம் வராது.

எதிர்வீட்டு நபீஸா: நம்மல்லாம் படிக்கும்போது டீச்சர் கொஞ்சம் அலட்டுவாக. அக்கரையா எடுத்து சொல்லுவாக. இப்போவ்லாம் ஸ்கூலு போறதுக்கே பெரும்பாடா ஈக்கிது. சரி சீனி வாங்கிட்டியா?
பக்கத்து வீட்டு பாத்திமா: நான் பணம் கொடுக்கபோறேன். ஜொகராக்கு 500 ரூவாய் கொடுத்தால் புரோஜனமா இருக்கும்.

எதிர்வீட்டு நபீஸா: அதுவும் சரித்தான். நேத்து தான் 1000 ருபாய் ATMல எடுத்தேன் அதுக்காட்டிம் கரைஞ்சிடுச்சு!!. உனக்கு தெரியுமா? இந்தியாவுலயும் சுவீஸ் பேங்கு இருக்குதாம்!

பக்கத்து வீட்டு பாத்திமா: அது என்னா சுவிஸ் பேங்கு. கனரா பேங்கு, இந்தியன் பேங்கு மாதிரியா?

எதிர்வீட்டு நபீஸா: கேபிள் டீவி கனெக்சன் கொடுக்கும்போது செய்தி பாக்கத்தான் வச்சிருக்கேன்னு சொல்லிட்டு செய்தியல்லாம் பாக்கிரியலா இல்லையா? அந்த காலத்தில ராஜாக்கள் சுரங்க அடிவாரத்திலும், அரண்மனை கீழே சுரங்கத்துலயும் ரகசிய ரூமுலே நகைகள், வைரம், முத்துக்கள் பதுக்கி வச்சிருக்காகலாம். கேரளாவுல கோயில்ல பாதாள அறையில் விலை மதிக்க முடியாத ஆபரணங்கள், விலை உயர்ந்த முத்துகள கேரள அரசு கைப்பத்தியதாக கேள்வி பட்டேன். பவுனு நகை விக்கிற ரேட்டுக்கு அதை மார்க்கெட்ல உட்டா பவுனு வெலையாச்சும் குறையும். இப்ப நீ சொல்லு இந்தியாவ்ல சுரங்க சுவீஸ் பேங்கு இருக்கா...!!! இல்லையா...!!!

எதிர்வீட்டு நபீஸா: சரி ஜொகரா வீடு வந்துரிச்சு. அப்பறம் பேசிக்கிடுவோம்.

பக்கத்து வீட்டு பாத்திமா: அஸ்ஸலாமு அலைக்கும் ஜொகரா.

ஜொகரா : வ அலைக்கும் சலாம் வாங்க உள்ள.

எதிர்வீட்டு நபீஸா: என்னா நல்லா ஈக்கிரியா, குழந்தை மூக்குமுழி எல்லாம் உன்ன மாதிரியே இருக்குது.

ஜொகரா: நல்லா ஈக்கிறேன். உங்க உம்மா வாப்பா எல்லோரும் நல்லா ஈக்கிறாகளா...!!

எதிர்வீட்டு நபீஸா: ஈக்கிறாக. ஆஸ்பத்திரிலே டாக்டர், நர்செல்லாம் நல்லா கவுனிச்சகளா

ஜொகரா : சுகப்பிரசவம் பாத்துட்டு நீ ரெண்டு மூனு நாள்ல ஊட்டுக்கு போய்ரலாம்னு டாக்டர் சொன்னதும் அப்பவே வலி எல்லாம் காத்தா பரந்துரிச்சு. புள்ளைக்கு தாய்பால்தான் கொடுக்க சொன்னாங்க அதான் கொடுக்குறேன். என்னுடைய தோழி தாய்பால் கொடுத்தா அழகு போய்டுன்னு சொன்னா. அதான் ஒரு மாதிரியா ஈக்கிது

பக்கத்து வீட்டு பாத்திமா: அடி போடீ பைத்தியக்காரி. தாய்பால்ல உள்ள மருந்து பத்தி தெரியுமா உனக்கு....? தாய்பால்ல கடும் பேதியை தடுக்கக்கூடிய ஒரு முக்கியமான தன்மை ஈக்கிது. அது மட்டுமா குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் குழந்தைக்கு பேதி வராமல் தடுக்ககூடிய சக்தியும் அதுலதான் ஈக்கிது. குழந்தயின் வளர்ச்சியயும் ஊக்குவிக்கிது. யாரு பேச்சையும் கேட்டுகிட்டு தாய்ப்பால் குடுக்காம ஈந்திடாதே!

ஜொகரா: பெரிய மனுச. மூத்தவோ இவ்வளவு சொல்றிய யாராவது கேக்காம இருப்பார்களா? புள்ளை பெக்குறது மட்டும் கடமை இல்லே வளர்த்து ஆளாக்கனும். 1-2 வயசுவரைதானே தாய்ப்பாலு. அப்பத்தான் நோய் நொடி இல்லாமல் வளரும்.

பக்கத்து வீட்டு பாத்திமா: சரி. ஜொஹரா புள்ளை பெத்த மருத்து குடுத்து உடுறேன். மறக்காம அதையும் குடி. பல மூலிகைகள் இருக்கு. தாய்ப்பாலு மூலமா குழந்தைக்கும் போகும்.

எதிர்வீட்டு நபீஸா: சரி ஜொஹராமா. நாங்க போயிட்டு வர்றோம். இன்ஷா அல்லாஹ் அப்பறம் பாப்போம்.


முதல் பாகம் பார்க்க: அர்த்தமுள்ள அரட்டை - 1
ஆக்கம்: சகோதரி மசூதா
நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி