"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
30 ஜூலை 2011

சுருக்கமாக ஓர் அகல பாதை அறிக்கை. இது புதுசு.

0 comments
ரயில் சத்தத்தை தவிர மற்ற எல்லாருடைய பேச்சு(பேட்டி) சத்தத்தையும் நம் காதுகள் எப்படியோ கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.. அப்படி கேள்விப்பட்டதையே இங்கு பதிகின்றேன்.. வருமா வராத.. வரும் ஆனால் வராதா என்பதெல்லாம் உங்கள் கற்பனை திறனுக்கே விட்டுவிடுகின்றேன்..

பட்ஜெட்டில் அறிவித்த புதிய ரெயில்கள் அனைத்தும் செப்டம்பர் மாதத்திற்குள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே துறை இணை அமைச்சர் முனியப்பா கூறினார்.
தஞ்சை ரெயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ரெயில்வே இணைந்து விட்டது. குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதிக்கு பஸ்களை விட ரெயில் தான் மக்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது. மக்களின் நலனை மனதில் கொண்டே ரெயில் போக்குவரத்தில் சிறந்த திட்டங்களை ரெயில்வே முன்னாள் மத்திய மந்திரி மம்தா பானர்ஜி நடைமுறைப்படுத்தினார். மாதத்திற்கு ரூ.25 கட்டணம் செலுத்தி 100 கிலோ மீட்டர் பயணம் செய்யும் வசதிகளையும் மக்களின் நலனை கருதியே அவர் செயல்படுத்தினார்.

சென்னை பெங்களூர், சென்னை கோவை, கோவை எர்ணாகுளம் ஆகிய 3 வழி தடங்களில் அதிகவேக பயணிகள் ரெயில் போக்குவரத்திற்கான தனிப்பட்ட ரெயில் பாதை அமைப்பது குறித்து சர்வே நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அதிவேக ரெயில் பாதையில் மணிக்கு 100 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படும். இதுபோன்று கொல்கத்தா சென்னை, சென்னை மும்பை, புதுடெல்லி சென்னை, சென்னை கோவை ஆகிய 4 வழிகளில் சரக்கு போக்குவரத்திற்கான தனிப்பட்ட ரெயில் பாதைகள் அமைக்க சர்வே நடத்தப்பட்டு வருகின்றது. புதுடெல்லி மும்பை, மும்பை கொல்கத்தா இடையே சரக்கு போக்குவரத்திற்காக தனிப்பட்ட ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

2010 11 ம் ஆண்டில் இந்திய ரெயில்வேயின் மொத்த வருவாய் ரூ.4,789.43 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 4.26 சதவீதம் அதிகம். தஞ்சை அரியலூர் இடையே தனியார் பங்களிப்புடன் ரெயில் பாதை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2011 12 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தென்னக ரெயில்வேக்கு 16 புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் 5 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 11 ரெயில்கள் செப்டம்பர் மாதத்திற்குள் படிப்படியாக இயக்கப்படும். தென்னக ரெயில்வேயில் புதிய பாதை அமைத்தல், மின்மயமாக்கல், ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு வசதிகள் போன்ற வசதிகளை செய்வதற்காக ரூ.2,400 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் இருந்து சென்னைக்கு தினமும் ரெயில் இயக்க வேண்டும் என்றும், மீட்டர்கேஜ் பாதையில் தஞ்சை வழித்தடத்தில் சென்னைக்கு இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் அகலப்பாதையில் இயக்க வேண்டும் என்றும் உங்கள் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அகல ரயில் பாதை கொண்டுவருவதை ஒரு லட்ச்சியமாக கருதும் நமது சமூக நல வாழ்வு பேரவை போன்றவர்களுக்கு நம் ஆதரவு தெரிவிக்கவேண்டியது இதுதான் சிறந்த தருணமாக எமக்கு தோன்றுகிறது. அமைச்சர் நம்ம மாவட்டம் வரை வந்துவிட்டார். நம்ம ஊற மறந்துபோய் இருப்பவர்களுக்கு யாராவது ஒரு தொப்பியும், நோம்பு கஞ்சியும் போட்டு கொடுத்து மயக்கத்த தெளிய வச்சி அனுப்பிவச்சா பரிசுக்கு பதில் சிபாரிசு கிடைச்சாலும் போதுமப்பா.

பதிப்பு : meerashah
நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி