சமீபத்தில் மும்பையில் நடந்த தொட குண்டுவெடிப்பையடுத்து கருத்து
தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சில கருத்துக்களை சொல்லியுள்ளார்.
அவை அனைத்தும் அக்கப்பூர்வமான கருத்துக்கள். அவற்றை படித்தால் பயங்கரவாதம்
விஷயத்தில் மோடியின் ஆதங்கம் வெளிப்படுகிறது. ஆனால் மோடி சொல்லும் ஆலோசனையை
மத்திய அரசு கடைபிடிக்கத் தொடங்கினால் என்னாகும் என்பதை கடைசியாக பார்ப்போம்.
இப்போது மோடியின் வார்த்தைகளிலிருந்து....
""மத்திய அரசின் வளைந்து கொடுக்கும் அணுகுமுறையால், பயங்கரவாதிகளுக்கு தெம்பு
அதிகரித்து விட்டது. அதனால், இந்தியாவில், விரும்பும் இடத்தில் எல்லாம்
தாக்குதல் நடத்துகின்றனர், மும்பை தொடர் குண்டு வெடிப்புகளில், அப்பாவி மக்கள்
உயிரிழந்துள்ளனர். தற்போதைய மத்திய அரசு, பயங்கரவாதிகள் விஷயத்தில் வளைந்து
கொடுக்கும் அணுகுமுறையை பின்பற்றுகிறது. அதனால், பயங்கரவாதிகளுக்கு தெம்பு
அதிகரித்து, விரும்பும் இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்துகின்றனர்.
பயங்கரவாதத்தின் கோரப் பசிக்கு, நாட்டில் ஏராளமான மக்கள் இரையாகியுள்ளனர்.
இதுபோல் ஈவு இரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு
வழங்கக் கூடாது. மன்னிப்பு என்பது மனிதர்களுக்குரியது. அப்பாவி மக்கள் மீது
தாக்குதல் நடத்தும் பயங்கரவாதி, "மனிதன்' என அழைக்க தகுதியற்றவன். மதக்
கலவரங்களை ஒடுக்க சட்டம் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டும் மத்திய அரசு,
பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டுகிறது. அமெரிக்கா
உட்பட, பல்வேறு நாடுகள், உறுதியான நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாதத்தை
கட்டுப்படுத்தியுள்ளன. இவ்வகையில், இந்தியாவிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக,
கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான், பயங்கரவாதம்
கட்டுக்குள் வரும்' என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தின் கோரப் பசிக்கு, நாட்டில் ஏராளமான மக்கள் இரையாகியுள்ளனர்.
இதுபோல் ஈவு இரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு
வழங்கக் கூடாது. மன்னிப்பு என்பது மனிதர்களுக்குரியது. அப்பாவி மக்கள் மீது
தாக்குதல் நடத்தும் பயங்கரவாதி, "மனிதன்' என அழைக்க தகுதியற்றவன் என்று
சொல்லும் மோடி, தனது வார்த்தையை தனக்கே பொருத்திப் பார்ப்பாரானால், ஏனைய
பயங்கரவாதிகளை விட இவருக்கு கச்சிதமாக பொருந்துவதைக் காணலாம். ஏனெனில் தனது
சொந்த மாநிலத்து மக்களையே கருவறுத்த பயங்கரவாதிதான் இவர். அதுமட்டுமன்றி அது
பற்றிய ஆவணங்களும் இவரது அரசால் அளிக்கப்பட்டுள்ளன என்றால் இவர் பயங்கரவாதியா?
அல்லது மகாத்மாவா? மோடி சிந்திக்கட்டும்.
மேலும் மோடியின் ரத்த கறைபடிந்த கையை கண்ட மற்றொரு மனிதகுல விரோத நாடான
அமெரிக்காவே, 'எங்கள் நாட்டுக்கு வந்து விடாதே' என்று மோடிக்கு விசா
மறுப்பதில் இருந்து மோடியின் பயங்கரவாதத்தை தெரிந்து கொள்ளலாம். எனவே மத்திய
அரசு மோடியின் அறிவுரையை அமுல்படுத்த தொடங்கினால், முதலில்
நடவடிக்கைக்குரியவர் மோடியாகவும், அடுத்து பயங்கரவாதத்தை ரதயாத்திரை மூலம்
தொடங்கி வைத்தவர்களும் பாபர் மஸ்ஜித் இடிப்பு
குற்றவாளிகளுமான அத்வானி உள்ளிட்டோரும், அடுத்தபடியாக பல்வேறு
குண்டுவெடிப்புகளில் சம்மந்தப்பட்ட சங்க்பரிவார கும்பலுமாகத்தான் இருக்கும்
என்பதை மோடி மறந்து விடக்கூடாது. மேலும் மத்திய அரசு உடனடியாக மோடியின் ஆசையை
நிறைவேற்றவேண்டும். பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆனாலும் மத்திய அரசு மவுனம் காக்கின்ற காரணத்தால், பயங்கரவாதிகளே
பயங்கரவாதம் என ஓலமிட்டு காமெடி செய்கிறார்கள். என்னத்த சொல்றது?