இன்று(29/07/2011) நமதூரில் வெள்ளிக்கிழமை என்பதால் பெரும்பாலான கடைகள் விடுமுறை விடுவது வழக்கம். அரசு அலுவலகங்கள் மட்டும் செயல்படும். அந்த வகையில் புதுத்தெருவில் அமைந்துள்ள ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியில் 12 மணி அளவில் ஜும்மா தொழுகைக்கு மக்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை அலாரம் அலற ஆரம்பித்தவுடன் ஏராளமான பொதுமக்கள் வங்கி முன் குவிந்தனர்.
தவறுதலாக அலாரம் அடித்துவிட்டதாக வங்கி மேலாளர் விளக்கம் அளித்தார், பின்னர் அலாரம் நிறுத்தப்பட்டதும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.