"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
23 ஆகஸ்ட் 2011

புது பணக்காரர்களின் அல்டாப்...

0 comments
இதில் பூர்வீக பணக்காரர்களை விட புது பணக்காரர்களின் அல்டாப் அறவேத் தாங்க இயலாது புதிதாக பணத்தைக் கண்டவர்கள் தங்களிடம் வசதி வந்துவிட்டதைப் பிறருக்குக் காட்டுவதற்காக அவர்கள் அமைத்துக் கொள்ளும் நடை, உடை பாவனை பூமியேப் பிளந்து விடுமோ எனும் அளவுக்கு இருக்கும்.

இவர்களில் சிலர் பைசாவைப் பார்ப்பதற்கு முன் சமமாகப் பழகியவர்களை எங்காவது பார்க்க நேரிட்டால் பல வேளைகளில் சிரிக்கவும் கூட மாட்டார்கள், எதையாவதுக் கேட்டு விடுவாரோ அல்லது பழைய ஞாபகத்தில் நெருங்கி வந்து உட்கார்ந்து பிளேடைப் போட்டு விடுவாரோ என்றெண்ணி பார்க்காதது போல் பாவனை செய்வார்கள் அல்லது சடேரென முகத்தையும் கூட திருப்பி விடுவார்கள் அதையும் மீறி நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால் உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருக்கிறதே என்று வேண்டுமென்றேக் கூறிப் புறக்கனிப்பார்கள்.

பணமும் பதவியும் வரும் பொழுது பலருக்கு பகட்டும் பந்தாவும் கூடவே வந்து பழைய வாழ்க்கையை மறக்கடிக்கச் செய்வதற்கு எது காரணம் ?
அவைகள் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?

நபித்தோழரின் வாழ்க்கையில் ஓர் நாள்

அப்துல்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)அவர்கள் மிகப்பெரும் செல்வந்தரும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 பேரில் ஒருவருமாவார் அவரின் வணிகக் கூட்டம் நகருக்குள் வரும் பொழுது நகரேக் குலுங்கும் அப்படிப்பட்ட செல்வந்தர் பல வேளைகளில் தங்களுடைய தோழர் முஸ்அப் பின் உமைர்(ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டப் பொழுது போதாத கஃபன் துணியை காலுக்கும் தலைக்கும் இழுத்து கடைசியில் இலைகளை கூடுதலாக வைத்து அடக்கம் செய்த வறுமை நிலையை நினைத்து அழுவார்களாம். உயர் தர உணவு வகைகள் அவருக்கு முன் வைக்கப்பட்டால் கடந்த காலத்தில் இஸ்லாமிய வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உணவுக்குக் கூட வழியில்லாமல் வாடிய நபித் தோழர்களை நினைத்து அழுவார்களாம்.

நபித்தோழர் அப்துல்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அவர்களிடம் குவிந்து கிடந்த செல்வம் தடம் புரளச் செய்யாததற்கு எது காரணம் ? தான் கஸ்டப்படும்பொழுது தன்னுடன் நெருங்கிப் பழகிய தோழர்களின் நட்பை மறக்கடிக்கச் செய்யாததற்கு எது காரணம் ?

இறையச்சத்தைத் தவிற வேறெதுவும் இல்லை!
இறையச்சம் என்ற கடிவாளம் பூட்டப்பட்டால் மட்டுமே வாழ்க்கை பயணத்தில் ஆடம்பரம், ஆணவம் என்ற பள்ளத்தில் சறுக்கி விழ விடாமல் இழுத்துப் பிடித்து நிருத்தும்.

செல்வங்களை வாரிசுகளுக்காக சேர்ப்பது, பாட்டன் முப்பாட்டனுடைய செல்வத்துக்கு வாரிசாக இருப்பது, அவற்றை அனுபவிப்பது யார் மீதும் குற்றமாகாது. அதற்கு இஸ்லாத்தில் தடையும் இல்லை, மாறாக தாராள அனுமதி உண்டு ஆனால் அதை இஸ்லாம் அனுமதித்த வழியில் அனுபவிக்க வேண்டும் அதை விட்டுச் செல்வதற்கு முன் அதை அனுபவிக்கும் வாரிசுகளுக்கு தான் எவ்வழியில் பொருளீட்டினோமோ அவ்வழியில் பொருளீட்டவும், தான் எவ்வாறு அதை அனுபவித்தோமோ அதேப் போன்று அனுபவிக்கவும் வஸியத் செய்வதுடன் இறையச்சத்தையும், ஒழுக்கத்தையும் சேர்க்க மறக்கக் கூடாது.

இறையச்சம் எவரிடத்தில் இல்லையோ அவரே முறையற்ற வழிகளில் பொருளாதாரத்தை ஈட்டி அவற்றை முறையற்ற வழிகளிலும் செலவிடுகின்றார். அதனால் மேற்காணும் தீயபண்புகள் குடிகொண்டு விடுகின்றது.

இறையச்சம் எவரிடத்தில் இருக்குமோ அவர் முறையான வழிகளில் பொருளீட்டுவதுடன், பாட்டன், முப்பாட்டன் விட்டுச் சென்ற செல்வத்தையும் முறையாக பராமரிப்பார் செல்வத்திற்கு மேல் செல்வம் குவிந்தாலும் மேற்காணும் பகட்டும், பந்தாவும் வரவே வராது ...

ஆக்கம் :ஏ.எம்.பாரூக் (அதிரை)
பதிப்பு :அதிரை FACT

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி