"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
22 ஆகஸ்ட் 2011

நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி? செய்முறை காணொளி

0 comments
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அதிரைfact வலைத்தளம் எக்காரியத்திற்கும் செயல் வடிவம் கொடுத்திட எத்தனித்து விட்டால் அதன் முழுமை நிகழ்வாக உணர்த்திக் காட்டுவதில் முன்னனியில் இருப்பதை எங்கள் வாசக நேசங்கள் நன்கறிந்ததே !

சமையல் என்பது ஒரு கலை ! அந்த கலையால் படைத்த உணவை ருசிப்பதில் எம்மிடமிருக்கும் ஆர்வமும் போட்டியும் அல்லது அதன் சுவையை விமர்சிப்பதிலும்ஆர்வம் காட்டுவோம். இதுநாள் வரை பெரும்பாலும் சமையல் குறிப்புகள் என்று ஏராளமாக எழுத்து வடிவிலும் /அச்சுவடிவிலும்தான் நாம் கண்டிருக்கிறோம் ஒரு சிலவற்றை தவிர, அப்படியான சமையல் குறிப்புகளைவாசித்து விட்டு முயற்சித்தும் பார்த்து ருசித்தும் இருந்திருக்கிறோம்.

இனி வழமையாக வாய்ப்புகள் வசப்படும்போதும் அதிரைநிருபரின் சமையல் கலை செயல்வடிவ வல்லுநர் சகோதரர் அதிரை ஃபாரூக் அவர்களுடைய சமையல்களின்செய்முறை காணொளிகள் இடம்பெறச் செய்ய இருக்கிறோம். அதன் தொடர்ச்சியின் துவக்கப் பகுதியாக ரமளான் மாதத்தில் நம் யாவரின் மனம் நாடும் உணவாக "நோன்பு கஞ்சி" தயாரிக்கும் செயல் முறையினை காணொளித் தொகுப்பாக இங்கே வழங்குகிறோம்.





இந்த நோன்பு கஞ்சிக்கு அதிரை அஜ்மாஸ் நோன்பு கஞ்சி என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த செய்முறை பிடித்திருந்தால் செய்து பாருங்கள். இந்த காணொளி பற்றி தங்களின் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறோம்.

நன்றி :அதிரை நிருபர்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி