"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
11 ஆகஸ்ட் 2011

டயட் நோன்பு கஞ்சி

0 comments
நோன்பு கஞ்சி இல்லாத நோன்பே கிடையாது. வருட வருடம் நோன்பு வந்து விட்ட்து என்றால் மாலை இஃப்தாருக்கு அனைவரின் இல்லத்திலும் தயாரிப்பது நோன்பு கஞ்சியும் அதுக்கு துணையா பஜ்ஜி கட்லெட் சமோசா இதில் ஏதாவது ஒன்று. காலையில் இருந்து நோன்பு நோற்று மாலை நோன்பு திறக்கும் போது இந்த கஞ்சியை முதலில் குடிப்பதால் வயிறு குளிர்ந்து எந்த உபாதையும் இல்லாமல் இருப்ப்து நோன்பு கஞ்சி தான், இது ஊருக்கு ஊர் செய்முறைகள் மாறுபடும். நான் பல முறைகளில் செய்து பார்த்தாச்சு, இப்ப நேற்று செய்த்து எண்ணையில்லாமல் அதாவது தாளிப்பு இல்லாமல் செய்து பார்க்கலாம் என்று செய்தேன். குடிக்க பாகமாக அருமையாக இருந்த்து.



இதில் எனக்கு ரொம்ப பிடித்த்து சென்னையில் பள்ளி வாசல்களில் கொடுக்கும் நோன்புகஞ்சி சூப்பர் அது மொத்த்மாக பெரிய தேக்‌ஷாவில் செய்வதால் சுவை இன்னும் கூடும்.

கஞ்சி குடித்துவிட்டு கண்டிப்பாக லெமன் ஜூஸ் குடிக்க ரொம்ப பிடிக்கும்/



தேவையானவை

பொடித்த நொய் (அரிசி பொடித்த்து) – அரை டம்ளர்

கடலை பருப்பு – இரண்டு மேசைகரண்டி

கேரட் – ஒரு சிறிய துண்டு

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

பச்ச மிளகாய் – ஒன்று

உப்பு – தேவைக்கு

பொடியாக அரிந்த இஞ்சி - அரை ஸ்பூன்

பொடியாக அரிந்த பூண்டு - முன்று

கொத்துமல்லி தழை – சிறிது

புதினா – சிறிது



மட்டன் (அல்லது) சிக்கன் கீமா – 100 கிராம்

மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

உப்பு – கால் தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி (பட்டை,ஏலம்,கிராம்பு தூள்)



செய்முறை



அரிசியை பொடித்து நொய்யாக அரை டம்ளர் எடுத்து அத்துடன் கடலை பருப்பை ஊறவைக்கவும்.

கீமா (மட்டன் (அ) சிக்கனை எடுத்து கழுவி சுத்தம் செய்து அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு , கரம் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க் வைத்து கொதி வரும் போது ஊறிய அரிசி + கடலை பருப்பை போடவும்.

தேவைக்கு (ஒரு ஸ்பூன் ) உப்பு சேர்த்து கேரட் துருவி போட்டு, இஞ்சி , பூண்டு, வெங்காயம் அரிந்து போட்டு, தக்காளியை நீளவாக்கில் நான்காக அரிந்து சேர்த்து , பச்சமிளகாயையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க விட்டு வேக விடவும்.

நன்கு வெந்து கொண்டு இருக்கும் போது வெந்து வைத்துள்ள கீமாவையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கடைசியாக கொத்துமல்லி தழை, புதினா, ஒரு ஸ்பூன் நெய் விட்டு இரக்கவும். தேவைபட்டால் சிறிது தேங்காய் பவுடர் கரைத்து ஊற்றிக்கொள்ளலாம்.



பிரஷர் , சுகர் உள்ளவ்ர்கள் பிரியாணி போல் தாளித்த கஞ்சி அதிகம் சாப்பிட முடியாது. எண்ணை இல்லாமல் இருப்பதால் இதைதாராளமாக நல்ல குடிக்கலாம்.தாளிப்பு சுவைதான் பிடிக்கும் என்பவர்கள் கடைசியாக சிறிது எண்ணை + நெய் கலந்து பட்டை சிறிய துண்டு போட்டு வெங்காயம், சிறிது இஞ்சி பூண்டு, கருவேப்பிலை போட்டு தாளித்து குடிக்கலாம்.

பேச்சிலர்களுக்கு இந்த முறை கொஞ்சம் ஈசியாக இருக்கும், குக்கர் இல்லாதவர்கள் இப்படி சட்டியில் வெளியில் கஞ்சியை வேகவைத்து செய்யலாம்.

Iftar Menu
கீமா கஞ்சி ,வாழக்காய் பஜ்ஜி , தர்பூஸ், லெமன் ஜூஸ், பேரிட்சை புதினா சட்னி,பழங்கள்



சிக்கன் சூப், ரோஸ் மில்க், உளுந்து வடை, கல்கண்டு வடை, வெங்காய பஜ்ஜி,கருப்பு கொண்டைகடலை சுண்டல், ஜவ்வரிசி கடல் பாசி, பழங்கள்


மேங்கோ கடல் பாசி, சாக்லேட் கடல் பாசி, ரூ ஆப்ஷா கடல் பாசி
இப்படி கஞ்சியில் வடை பிச்சி போட்டு கூடவே புதினா சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பர் தான்..






டிஸ்கி: என்ன படிச்சாச்சா பயனுள்ளதா இருந்ததா? அப்படி காசா பணமா உங்கள் கருத்தையும் சொல்லிட்டு ஒரே ஒரு ஓட்டையும் போட்டுட்டு தான் போறது

நன்றி :ஜெலிலா

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி