"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 ஆகஸ்ட் 2011

ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றி பிடித்து வாழ்வோமாக...

0 comments
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)இந்த இறை வசனத்தை அறியாதவர்கள் நம்மில் இருக்க முடியாது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்த வழித்தோன்றல்கள்தான். நம்மில் ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது.


ஆனால் நாம் இன்று எப்படி வாழ்கின்றோம்?


ஒற்றுமை என்ற வார்த்தை நம்மிடம் உப்பிற்காவது இருக்கிறதா?

வீட்டுக்கு வீடு சண்டையில் தொடங்கி, பள்ளிவாசல் வரை , ஒற்றுமை என்ற சொல்லே முஸ்லிம்களிடம் கேலிப் பொருளாகிப் போனது. ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் கூட உணவிற்காவே அன்றி கொலை செய்வதில்லை; சண்டை போடுவது இல்லை.

ஆனால் நமதூரில் உள்ள பிரபல பள்ளி வாயிலின் இவ்வருட ரமலான் நோன்பு ஆரம்பித்த உடனேயே அந்த இறையச்ச பள்ளியில் நிர்வாக ஒற்றுமையின்மை நிலவுகிறது, நிர்வாகத்தி
ல் உள்ள ஒருசிலர் ஹிஜ்பு அஷர் நேரத்திலும் ஹைதர் அலி மௌலான பயான் தராவிஹ் தொழுகைக்குப்பின் என தன்னிச்சையான முடிவை எடுக்க மற்றொரு குழுவினர் இது நாள் வரையிலும் இருந்த அதே நடைமுறையை மாற்ற கூடாது என வாதம் செய்து இரு கோஷ்ட்டிகளாக பிரிந்து பணியாற்றி வருகின்றனர் .

இதற்க்கு என்ன தான் கரணம் ?


இந்த இறையச்ச பள்ளி கடந்த கால நிர்வாகிகள் பள்ளியின் சொத்துக்களை காக்க தவறியதன் பொருட்டு இப்பளியின் வருவாய் வெகுவாக குறைந்தது இதனை கண்ட இந்த முகல்லா வாசிகளின் சிலர் பள்ளி நிர்வாகத்திற்க்கு எதிரான நடவடிக்கைள் மேற்கொண்டு பள்ளியின் வக்பு நிலங்களை காப்பாற்றினார்.


அதிலிருந்து பள்ளியின் வருமான கிடு கிடு என உயர்ந்தது அதன் பிறகு வக்புவாரியம் இந்த முகல்லாவை சார்ந்த 7 நபர்களை தேர்ந்தெடுத்தன அதிலிருந்து பள்ளியின் நிர்வாகம் எந்த வித பிரச்சனையும் இன்றி சுமூகமாக நடந்து வந்தது .


கடந்த திமுக ஆட்ச்சியின் பொழுது தோழமை கட்ச்சியான தமுமுக வின் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்களின் தலைமையிலான வக்பு வாரியம் அமைந்தது அந்த தருணத்தில் இறையச்சபள்ளியின் நிர்வாக கமிட்டியின் பணிக்காலமான3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் நிர்வாக தேர்வு நடத்த வேண்டும் என வக்பு வாரியத்தின் தஞ்சை அலுவலகம் பணித்தது.

அதன் பேரில் பழைய நிர்வாகிகள் உள்பட சுமார் 20நபர்கள் மனுத்தாக்கல் செய்தனர்
பரிசீலனைக்குப்பின் 7நபர்கள் தேர்தெடுத்து பள்ளியின் நிர்வாக கமிட்டியாக வக்பு வாரியம் அமர்த்துவது என்பது விதி

அதன் பேரில் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட 7 நபர்களையும் எந்த வித நேர்காணலும் நடத்தாமல் உடனடியாக நிர்வாகத்தில் அமர்த்தப்பட்டு விட்டன.


இதனால் சந்தேகப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் இதன் பின்னணி பற்றி ஆராய்ந்ததில் தேர்தெடுக்கப்பட்ட 7 நபர்களும் தவ்ஹீத் சிந்தநியுடையவர் என்றும் செ ஹைதர் அலியின் நெருங்கிய நண்பர்கள் என்றும் வெட்ட வெளிச்சமானது . தனது ஆதரவாளர்களை நியமித்து தனது நடுநிலைமையை(?) பறைசாற்றினார் செ. ஹைதர் அவர்கள் .

இந்த நிர்வாக கமிட்டிக்கு முன்னால் தெர்த்டுக்கப்பட்ட நிர்வாகிகளை வக்பு வாரியம் தேவை இல்லாத கேள்விகளை கேட்டு அவர்களை நேர்காணல் செய்து வைத்தது ஆனால் தற்பொழுதைய நிர்வாக கமிட்டி யாக தேர்ந்து எடுக்கப்பட்ட அவர்களின் ஆதரவாளர்களிடம் எந்த வித நேர்காணலும் நடத்தாமல் பதவி வகித்து வருகிறது.

இதன் பின்னணியில் மிகபெரும் சதி வேலை நடந்து வருவதாக முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறுகிறார் ..

அதாவது இந்த பள்ளியை பொறுத்த வரையில் ரமலானில் காலங் காலமாக நடந்து வரும் ஹிஜ்பு மற்றும் அதன் பின் சிறு மௌலூது ஆகியவைகளை இந்த புதிய நிர்வாகம் நிறுத்த முயற்ச்சித்தது ஆத்திரம் அடைந்த இம்முஹல்லாவாசிகள் இதை ஒரு போதும் நாங்கள் ஒத்துக்கொள்ள முடியாது என்றனர் நிர்வாகமோ நாங்கள் வைப்பதுதான் சட்டம் என வாதம் செய்து வருகிறது.


இதனையும் மீறி முஹல்லாவாசிகள் வெகு விமர்ச்சையாக மௌலூது சரிபை ஹிஜிபுக்குபின் ஓதி வருகின்றனர் நிர்வாகமோ அந்த நேரத்தில் பள்ளியின் ஒளிபெருக்கியை அனைத்து விடுகிறது இதனால் ஒவ்வெரு நாளும் பதட்டத்துடனேய முடிகிறது இந்த புனித மிக்க ரமளானின் இரவுகள் !

இந்த நிர்வாக கமிட்டியின் முக்கிய நபர் ஒருவர் தினமும் பள்ளியின் அலுவலக அறையிலேயே ததஜ நகர நிர்வாகி களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.


கடையநல்லூர் மஸ்ஜித்தூர் ரஹ்மான் பள்ளியின் நிலைமை நம் பள்ளிக்கு ஏற்படும் முன் முஹல்லாவாசிகள் விழித்துகொள்ள வேண்டும் என்பது அதிரை குரலின் வேண்டுகோள் !

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி