சென்னையிலிருந்து ஹஜ் சென்ற முதல் விமானம் அக்டோபர் 17ஆம் தேதி புறப்படட்து இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வழியாக 3,530 பேர் ஹஜ் செல்கின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரம் ஹஜ் பயணிகள் சென்னை வழியாக பயணம் மேற்கொள்கிறார்கள்.
இந்தியாவில் இருந்து ஹஜ் செல்லும் முதல் விமானம் 29ஆம் தேதி புறப்படும். கடைசி விமானம் அக்டோபர் 31ஆம் தேதி புறப்படும். இதேபோல், சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பும் முதல் விமானம் நவம்பர் 11ஆம் தேதியும் கடைசி விமானம் டிசம்பர் 11ஆம் தேதியும் புறப்படும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சென்னையில் இருந்து ஜித்தா செல்லும் முதல் விமானம் அக்டோபர் 17ஆம் தேதியும், கடைசி விமானம் அக்டோபர் 31ஆம் தேதியும் புறப்படும். இதேபோல், மதினாவில் இருந்து சென்னை திரும்பும் முதல் விமானம் நவம்பர் 28-ஆம் தேதியும், கடைசி விமானம் டிசம்பர் 9ஆம் தேதியும் புறப்படும்.
சென்னையில் இருந்து ஹஜ் செல்லும் பயணிகள் நேரடியாக ஜித்தா சென்று பின்னர் அங்கிருந்து மக்கா செல்வார்கள். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு அதன் பிறகு மதினா போவார்கள். அங்கு 8 நாட்கள் தங்கி இருந்துவிட்டு அங்கிருந்து சென்னை திரும்புவார்கள்.
சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயண தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை மையத்தில் ஆஜராக வேண்டும். பயணிகள் தங்கள் விமான ஒதுக்கீட்டு நிலையை இந்திய ஹஜ் கமிட்டியின் இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
2012ஆம் ஆண்டு முதல் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியும். எனவே, அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் முன்கூட்டியே சர்வதேச பாஸ்போர்ட்டை தயாராக வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பாஸ்போர்ட் காலாவதி காலம் 31.3.2013-க்கு முன்பு இல்லாததாக இருக்குமாறு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்
20 செப்டம்பர் 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி