"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
01 செப்டம்பர் 2011

34%எக்ஸ்ட்ரா

0 comments

தலைப்பை பார்த்தவுடன் எதோ நமக்கு கூடுதலாக இடஒதுக்கீடு கிடைத்துவிட்டதுபோல் பெருமை பட்டுகொள்ளதீர்.


இது பெருநாள் அன்று நமதூரில் வழக்கமாக விற்கும் சரக்கைவிட 33.5சதவீதம் கூடுதல் விற்பனை நடந்துள்ளதாக ஜெக்கரியா திரையரங்கம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் ஊழியர் செந்தில் கூறினார் .

வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் விற்கும் தொகைகளை விட விசேஷ தினங்களில் கூடுதலாக விற்ப்பது சகஜம் தான் அது அதிரையில் நடந்திருப்பது ஆச்சரியத்தை தருவதாக நமிடம் கூறினார் .


பட்டுகோட்டையை சார்ந்த நான்அதிரை கல்லூரியில் தான் படித்தேன் எனக்கு அதிரையில் நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இங்கு உண்டு அப்பொழுதெல்லாம் மது என்றாலே விழுந்து அடித்து ஓடும் இஸ்லாமியமக்கள் இப்பொழுது மதுவே கெதியென கிடக்கிறது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது .


இஸ்லாமிய பெருமக்கள் வாழும் இந்த ஊரில் இப்படிஅதிக படியான சரக்குகள் (?)!விற்ப்பது எனக்கு புதிது என்றார் அவர்
உண்மையில் வேதைபட கூடிய விஷயம்தான் .

அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90வது வசனத்தின் மூலம் அல்லாஹ் மதுபானம் அருந்துவதை தடைசெய்துள்ளான்:


'விசுவாசம் கொண்டவர்களே!. மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 05 - வசனம் 90)


தகவல் :அதிரையிலிருந்து ...அபு ஆமீனா
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி