வடஇந்தியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் சிக்கிம் மாநிலம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 64 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் சிக்கிம் மாநிலத்திற்கும் நேபாள எல்லைக்கும் இடையேயுள்ள இடமாகும். இதனால் சிக்கிம் மாநிலம் முழுவதும் மின்சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் சிக்கிம் மாநிலம் பேரவை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. பல குடியிருப்பு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டடுள்ளதாகவும், சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டது. அதிர்வுகள் ரிக்டர் அளவில் 6.1 மற்றும் 5.3 என பதிவாகியுள்ளது. இந்நிலடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் தலைநகரம் டெல்லி, மே.வங்காளம், உ.பி., பீகார், அதைச்சுற்றியுள்ள வடமாநிலங்களில் உணரப்பட்டது.
டார்ஜிலிங்கில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டது. பூடான் மற்றும் நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சேதம் குறித்து உடனடி தகவல் தெரியவில்லை.
19 செப்டம்பர் 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி