ஏராளமான முஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்து விட்டு, தற்போது நல்லவரைப்போல் நாடக அரங்கேற்றம் செய்து மக்களை மடையர்கள் என நினைக்கும் நிரந்தர கேடி உலக அமைதிக்கு(?) உண்ணா விரதம் எனும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தனதுநாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி ஆதரவு தெரிவித்து தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்கை கடைபிடிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து இன்று காலை காலை 11 மணியளவில் சென்னை கலெக்டர் ஆபிஸ் அருகில் தடையை மீறி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தேசிய தலைவர் S.M.பாக்கர் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்பட ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு கைதாகினர் அனைவரையும் ராயபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர் .
நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்