"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
05 செப்டம்பர் 2011

DUBAIயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இந்தியர் தற்கொலை ...

0 comments

துபாய் : ஐக்கிய அரபு குடியரசின் ரஸ் அல் கைமாவில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் வீட்டுக்குள் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ÔÔபூட்டிய வீட்டுக்குள் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பந்தப்ட்ட வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் 44 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஹால் சீலிங்கில் தூக்கில் தொங்கினார். 31 வயதுடைய பெண் படுக்கை அறையில் தூக்கில் தொங்கினார். 8 வயதுடைய சிறுமி மற்றொரு அறையில் முகத்தில் பிளாஸ்டிக் பையை மூடிக் கொண்டு இறந்து கிடந்தார். இவர்களது உடல்களை கைப்பற்றி தடயவியல் சோதனைக்காக அனுப்பி உள்ளோம்ÕÕ என்றார். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் இவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், மூவரும் கணவன், மனைவி மற்றும் மகளாக இருக்கக் கூடும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

நன்றி : TODAybbc

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி