முத்துப்பேட்டை செப்டம்பர் 29 : நியூ மெடிக்கல் ஜனாப் எஸ். சகாப்தீன் அவர்கள் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட தனது வேட்பு மனுவை இன்று முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தாக்கல் செய்தார். மேலும் இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் அளித்த பதில், இந்த போட்டி யில் நின்று வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்லது செய்வேன் என்றும், அனைத்து மக்கள் குறிப்பாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்,தலித் ஆகிய அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் எனது பணியை தொடங்குவேன் என்றும் அவர் தெரிவித்தார். இதில் மைதீன் மாமா, முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச் சங்கத்தின் நிறுவனர் ஜனாப். இபுன் ஹமீது, மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
முத்துபேட்டை எக்ஸ்பிரஸ்