அனேகமாக உலகமே எதிர்நோக்கி இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மின் பற்றா குறையாகத்தான் இருக்க முடியும். வளர்ந்த நாடானாலும் சரி, வளர்ந்து வரும் நாடானாலும் சரி அவர்களின் முக்கிய பிரச்னையே மின்சாரம் தான்.
எடுத்துக்காட்டாக ஜப்பான் நாடு தற்போது மிகப் பெரியளவில் மின் பற்றாக்குறையால் அவதியுற்று வருகிறது. ஆழிப்பேரலை (Tsunami) தாக்குதல்களால் அந்நாட்டின் அணுமின் நிலையம் சேதமடைந்து செயலிழந்தது அனைவரும் அறிவோம். இதன் காரணமாக அந்நாடு மிகப்பெரும் மின் பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளது.
இதனை சரி செய்யும் பொருட்டு அந்நாடு புதுவித ஆராய்ச்சி மற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த ஆய்வின் பலனாக மனிதர்களுடைய அசைவுகள் மற்றும் செயல்களிலிருந்து மின்திறனை பெறலாம் என்று கண்டுபிடித்திருக்கிறது. நமது ஒவ்வொரு அசைவுகளிலும் குறிப்பிட்ட அளவு திறன் வெளியாகிறது. இந்த திறனை சரியான முறையில் பயன்படுத்தி மின் திறனாக மாற்றலாம் என்பதே இப்போது அவர்களின் கண்டுபிடிப்பு. பல்வேறு விதங்களில் இவற்றைப் பயன்படுத்த ஆராய்ச்சியளர்கள் முயன்று வருகின்றனர்.