தமிழக-கேரள எல்லையில் முல்லை பெரியாறு அணையை முன்வைத்து கேரள அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேற்றிவரும் பதட்டமான சூழலில், இணையத்தில் கிடைத்த சுவாரயஸ்மான தகவல் இது. மற்றபடி, பயப்படும்படி எதுவுமில்லை!
சமீபத்தில் அதிரையை உற்றுநோக்கிய கூகிள் (GOOGLE).!என்ற பதிவில் கூகிள் மேப் வழங்கும் சிறப்பு குறித்து எழுதியிருந்தேன். அதேபோல் இன்னொரு சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ளவழிகாட்டி இணைய தளம் குறித்த செய்தி இது.
www.rome2rio.com என்ற இத்தளத்தில் உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் இன்னொரு பகுதிக்குச் செல்லும் வழித்தடத்தை இலகுவான முறையில் கிட்டத்தட்ட துல்லியமாக வழங்குகிறார்கள். துபாய்-அதிராம்பட்டினத்திற்கு வழிதேடியபோது கொஞ்சம் குழம்பியிருந்தாலும் தோரயமான விமான டிக்கெட் கட்டணம் முதற்கொண்டு தெரிவிக்கிறார்கள்!
இரண்டு நகரங்களுக்கும் இடயேயுள்ள முக்கிய நகரங்களுக்கான தூரம் மற்றும் காலமும் குறிப்பிடப்பட்டுள்ளதால் திட்டமிட்ட பயணங்களுக்கு இது நிச்சயம் உதவும். (தப்லீக் ஜமாத் செல்பவர்களுக்கு இதைவிடத் தெளிவாக ரூட் தெரியும் :)
மாற்று வழித்தடங்கள் (சாலை,விமானம்) இருந்தாலும் அதையும் குறிப்பிட்டுள்ளனர். மொத்தத்தில் ஊர்சுத்திகளுக்கு இது பயனுள்ள தளம்.
பதிவின் தலைப்புக்கான காரணம் சோதனைக்காக அதிரை-முல்லை பெரியாறு, அதிரை-கூடங்குளம் என்று தேடியதால் அதையே தலைப்பாக வைத்துவிட்டேன்.