"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
16 டிசம்பர் 2011

நடுத்தெரு ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு சாதனங்கள்

0 comments

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணாக்கர்கள் விளையாடுவதற்கான சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. பல வருடங்களுக்குப் பிறகு இந்த பள்ளியில் இத்தகைய விளையாட்டு சாதங்கள் நிறுவப்பட்டுள்ளதால் பள்ளி மாணாக்கர்களிடையே உற்சாகம் நிறைந்துள்ளது.


அவ்வழியாகச் செல்லும் பழைய மாணவர்கள் "நாம் படிக்கும்போதெல்லாம் இது மாதிரி இல்லையே!" என்ற ஏக்கப்பெருமூச்சுடன் கடந்து செல்வதைப் பார்க்கும்போது "துள்ளித்திரிந்த பள்ளிப்பருவம்" நினைவில் வந்து செல்வதைக் காணமுடிகிறது.

படிப்புடன் உடற்பயிற்சிக்கும் ஏதுவாக இத்தகைய சாதனங்களை நிறுவிய பள்ளி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், அப்பகுதியின் வார்டு மெம்பர். சகோ.ஹ.அப்துல் காதர் அவர்களுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.


புகைப்படம்: அ.வ.சலீம்
தகவல்: அதிரை ஃபேக்ட்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி