உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுலா துறை அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இதனுடன் சேர்ந்து ஹோட்டல் மேலாண்மைத்துறை, கேட்டரிங் துறையும் வளர்ந்துள்ளது. கேட்டரிங் துறையில் ஒரு பகுதி யாக பேக்கரியும் பிரதானமாக விளங்குகிறது.
பேக்கரி தொழிலிலும் பல்வேறு நுட்பங்கள் புகுத்தப்பட்டு விட்டன. வாடிக்கையாளர்களும் புதிய ரக பாஸ்ட்புட் உணவு வகைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
டிப்ளமோ படிப்பு :
பேக்கரி துறையில் வேலை பார்ப்பது என்பது வெறும் கேக் தயாரிப் பது மட்டுமல்ல. அது ஒரு கலை என்கின்றனர் இத்துறையில் இருப்பவர்கள். இந்த கலையை டிப்ளமோ மூலம் சில கல்வி நிறுவனங்கள் கற்றுத் தருகின்றன.
இந்த டிப்ளமோ படித்தவர்களுக்கு பேக்கரிகள்,உணவுப்பண்டம் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் மற்றும் பெரிய ஹோட்டல்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நல்ல ஊதியமும் கிடைக்கும்.
முதுநிலை டிப்ளமோ :
கடினமான வேதியியல் முறை களை கொண்டு, பேக்கரி தயா ரிக்கும் அறிவை பேக்கரி அறிவியல் நிர்வாகம் வளர்க்கிறது.
பல ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் தயாரிக்கும் முறை யையும் விவரிப்பதுடன், உணவு பொருட்கள், தயாரிக்கும் முறை கள் பற்றிய அரசு கட்டுப்பாடுகளையும் தெரிந்துகொள்ள உதவுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் மாணவர்களின் நிர்வாகத்திறமையையும், ஆராய்ச்சி, தயாரிப்புத் திறனையும் வளர்க்கிறது.