"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
28 நவம்பர் 2011

வெற்றியை நழுவவிட்ட இந்தியா ..!

0 comments
இந்தியாவுக்கும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் இன்று டிராவில் முடிவடைந்தது. டிராவில் முடிவடைந்தாலும் 20-20 ஓவர் போட்டியை விட மிகவும் பரபரப்பாக அமைந்தது இந்த டெஸ்ட்.

இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியபோது இந்தப் போட்டி உப்புச்சப்பில்லாமல் டிராவாக முடிவடையும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக அமைந்தது. ஆனால் Game of GloriousUncertainties என்பதை நிரூபிக்கும் வகையில் கடைசி பந்து முடிவடையும் வரை பல திருப்பங்கள் நிறைந்ததாக இந்தப் போட்டி விளங்கியது.

இன்று ஆட்டத்தை தொடங்கிய மே.இ.தீவுகள் அணி இந்திய சுழற் பந்துவீச்சாளர்களான ஓஜா, அஸ்வின் ஆகியோரின் அபார பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு சரிவதை போல் மளமளவென அவுட் ஆகினர். அந்த அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் 134 ரன்களில் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 590 ரன்கள் குவித்த அந்த அணி இம்முறை 134ரன்களுக்கு அவுட் ஆகியது மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்பியதை எடுத்துக்காட்டியது.

மே.இ.தீவுகள் அணி அணியில் பிராவோ 48 ரன்களையும், பிராத்வெயிட் 35 ரன்களையும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.சிறப்பாக பந்துவீசிய ஓஜா 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் விழ்த்தினர். பின்பு 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்தியாவுக்கும் ரன்களை எடுப்பதில் சிரமம் இருந்தது. சேவாக் 60 ரன்கள் எடுக்க மற்ற முன்னணி வீரர்கள் சோபிக்காததால் இந்தியா தோல்வியைச் சந்திக்கும் அபாயத்தில் இருந்தது.

ஆனால் விராத் கோஹ்லி அற்புதமாக ஆடி இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். வெற்றிக்கு 19 ரன்கள் இருந்தபோது கோஹ்லி அவுட் ஆனது இந்தியாவின் வெற்றியைப் பாதித்தது. 63 ரன்கள் கோஹ்லி எடுத்தார். பின்னர் வந்த கடைநிலை ஆட்டக்காரர்கள் ரன்கள் எடுப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டனர். கடைசி ஓவரில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றிருந்த நிலையில் அஸ்வினும் ஆரோனும் 2 ரன்களே எடுத்தனர். இதனால் இந்தப் போட்டி சமனில் முடிவடைந்தது. இரண்டு அணிகளும் இவ்வாறு ஒரே ஸ்கோர் எடுத்து ஆட்டத்தை சமன்செய்தது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் இங்கிலாந்தும் ஜிம்பாப்வேயும் மோதிய போட்டி இவ்வாறு சமனில் முடிவடைந்துள்ளது.

ஆட்ட நாயகம் மற்றம் தொடர் நாயகன் விருதை அஸ்வின் பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி