"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
27 நவம்பர் 2011

ஆண்களை “வெளுத்து” வாங்கும் சவூதிப் பெண்கள் !!!

0 comments

சவூதி அரேபியாவின் ஜித்தா நகர காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான புள்ளி விவரத்தை வெளியிட்டு அரபுநாட்டு ஆண்களை ஆடிப்போக வைத்துள்ளது.

“கணவன்மார்களை அடித்து வெளுத்து வாங்கும் பெண்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது என்பது தான் அந்த அதிர்ச்சியான புள்ளிவிவரம். ஒரு மாதத்திற்கு 145 ஆண்கள் அடியின் வேதனை தாங்க முடியாமல் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர் என்றும் இந்தக் கொடுமை ஆண்டுக்கு 20 சதவிகித அளவிற்கு அதிகரித்து வருகிறது என்றும் ஜித்தா நகர காவல்துறை தெரிவிக்கிறது.

“இதுபோன்ற வன்முறையை யார் செய்தாலும் அது குற்றம் தான் என்றாலும் பெண்கள் தங்களால் தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கும் போது தான் இவ்வாறு எல்லை மீறுகின்றனர் என்று இதற்கான காரணத்தை கூறுகின்றார் சவூதியின் பெண்ணுரிமை ஆர்வலரான ஃபாத்திஹா.

ஏராளமான குடும்பவியல் ஆலோசனை மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் ஃபாத்திஹா கூறுகிறார்.

ஜித்தா நீதிமன்றத்தில் குடும்பவியல் வழக்குகளில் ஆலோசகராக உள்ள முகம்மது மவ்லு£து அவர்கள், தாங்கள் சந்தித்த இரண்டு வித்தியாசமான வழக்குகள் குறித்துக் கூறி பெருகி வரும் இந்தப் பிரச்சனையின் உள்ளார்ந்த காரணத்தை வெளிப்படுத்துகிறார்.

ஒரு கணவன் அளித்த புகாரில்….

“காலம் முழுவதும் என் மனைவி அடிக்கின்ற அடியைப் பொறுத்துக் கொண்டு தான் இவ்வளவு நாளும் வாழ்க்கையை ஓட்டினேன். ஆனால் இப்போது என் உறவுகாரர்கள் முன்பாகவும் என்னை என் மனைவி அடிக்கத் தொடங்கி விட்டாள். அதுதான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை” என்று கூறியிருந்தாராம். மற்றொரு கணவன் அளித்த புகார் சற்று வித்தியாசமாக இருந்தது.

“என் மனைவி என்னை கண்மண் தெரியாமல் போட்டு துவைத்து எடுக்கிறாள். நான் எந்தக் குற்றமும் செய்வதில்லை. காலையில் ஃபஜர் தொழுகைக்கு எழுப்பும் போது “நல்ல து£க்கத்தில் இருக்கும் என்னை எப்படி எழுப்பலாம்”என்று காலையில் தொடங்குகிற அடி அன்று முழுவதும் இடியாக இறங்குகிறது என்று புகார் அளித்திருந்தாராம். தக்க ஆலோசனை மூலம் அந்த பெண்களுக்கும் கணவன்மார்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது என்று கூறினார் முஹம்மதுமவ்லூது.

அடி விவகாரம் அரபுநாடு முழுவதும் பெருகி வருகிறது. பலர் ஏற்கனவே இதை அனுபவித்து வந்தாலும் வெளிப்படுத்தாமல் இருந்தனர். இப்போது புகார்கள் குவியத் தொடங்கி விட்டன.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி