IRCTC என்ற HIV பதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக 2008 முதல் நடத்தப்படும் ஆய்வு குடங்களை பார்வையிட்டார் பின்பு அதிரையில் ஆறு நபர்களுக்கு மேல் HIV நோயால் பதிக்கபட்டுள்ளதாக அதிர்ச்சியுட்டும் தகவலை சேர்மன் அவர்களிடம் சொன்னார் அப்பிரிவை சார்ந்த செவிலியர்
பின்பு பிரசவ வார்டுக்கு அழைத்து சென்றார் ராஜலக்ஷ்மி என்கிற செவிலியர் கடந்த மாதம் மட்டும் 8 குழந்தைகள் இங்கு பிறந்து இருபதாகவும் அதில் முன்று குழந்தைகள் இஸ்லாமிய குழந்தைகள் என்றும் கூறினார், பிரசவ அறைக்கு அழைத்து சென்ற செவிலியர் ராஜலக்ஷ்மி அங்கு புதிதாக பிறந்த குழந்தையும் அக்குழந்தையின் தாயையும் அறிமுகபடுத்தினார்,அவர்களுடன் நலம் விசாரித்த பின்பு அங்கு உள்ள கருவிகளையும் அதன் பயன் பாட்டினையும் கேட்டறிந்தார்,செவில்லியர் ராஜலக்ஷ்மி தான் இங்கு 24 மணி நேரமும் மக்களுகாக சேவை செய்வதற்கு தயாராக இருபதாகவும் சேர்மன் அவர்களிடம் தெரிவித்தார்.
தடுப்பு ஊசிகள் போடும் இடத்திற்கு அழைத்து சென்ற தலைமை மருத்துவர் சராசரியாக ஒரு நாளைக்கு 500 நோயாளிகளுக்கு ஊசி போடுவதாகவும் ஏனைய மருத்துவ பயோ கழிவுகளை சுத்தம் செய்யும் முறையும் விளக்கி கூறினார்,
மருந்தகம்,கட்டுகட்டும் பிரிவுவையும் தலைமை மருத்துவர் நமக்கு காட்டினர், நிரழிவு நோயிகளால் பாதிக்க பட்டவர்களுக்கான தனிபிரிவையும், அவர்களின் எடை, இரத்த அழுத்தம் மற்றும் ஏனைய குறிப்புகளை கணினியில் பதிந்து செவிலியர்கள் நோயாளிகளுக்கு பிரத்தியோக நம்பர்கள் கொடுகிறார்கள் , அந்த நம்பருடன் மருத்துவரை சந்திக்கும் நோயாளிகளின் நோய் தன்மைகளையும் அவர்களின் ஹிஸ்டரி யையும் கணினியின் முலம் தெரிந்து கொள்கிறார்கள் மருத்துவர்கள், அதிரையில் இப்படி கணினி மயமக்காபட்டுள்ள முதல் மருத்துவமனை அரசு மருத்துவமனைதான் என்பதையும் தலைமை மருத்துவர் நம்மிடம் கூறினார்.
பின்பு பொது வார்டு, பெண்கள் வார்டுகளை பார்வையிட்டார் சேர்மன் அவர்கள், அங்கு சரிவரியாக சுத்தம் செய்யபடாத இடங்களை பாரவையிட்டார், பின்பு உழியர்களிடம் உடனடியாக சுத்தம் செயும்மாறு ஆணையிட்டார் சேர்மன்.
சுகாதார அதிகாரிகளையும் பார்வையிட்ட சேர்மன் மலேரியா டெங்கு போன்ற கொடிய நோய்களை அதிரையில் இருந்து ஒளிபதர்க்காக ஊருதிபூண்ட அதிகாரிகளையும் வெகுவாக பாராட்டினார்அதிரையில் 50 மேற்பட்ட கசநோயளிகள் இருபதாகவும் அவர்களுக்கு தகுந்த முறையில் மருத்துவ சேவை செய்வதாகவும் தெரிவித்தார்கள் அதனுடன் குழந்தைகளுக்கு ஏற்படும் கணைய நோயிகளுக்கு சிறந்த முறையில் மருத்துவம் செய்வதாகவும் தெரிவித்தனர் முன்னதாக , புதிதாக 20 படுக்கை வசதிகொண்ட புதிய கட்டுமானத்தை அதன் வடிவமைப்பாளர் சேர்மன் அவர்களிடம் எடுத்து கூறினார்.
நன்றி : முஹ்மத் ரபீக் , R அஹ்மத்.
thanks :adirai.in