அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முக்கிய நிகழ்வுகள் குறித்த பதிவில் AAMF இன்திட்டங்களாகச் சொல்லப்பட்ட சிலவிசயங்களில் தெளிவுபெற வேண்டி சில விசயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
AAMF இன் தேவையின் அவசியமாக ஊர் ஒற்றுமை என்பதையே முன்னிருத்தப்பட்டு கடந்த ரமலானிலும் அதன் பிறகு துபாய் கிரஸண்ட் பள்ளியில் நடந்த முதல் பொதுக்குழுவிலும் AAMF குறித்து அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தகைய நாடுகடந்த மக்களையும் ஒருங்கிணைக்கும் ஊரளவிலான ஒரே அமைப்பு அவசியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
அதேசமயம், இதன் எதிர்கால திட்டங்களாகச் சொல்லப்படும் சில விசயங்கள் ஏற்கனவே ஊரளவில், குறிப்பாக அனைத்து முஹல்லாக்களுக்குமாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவர். அதிரை பைத்துல்மால் எனும் 'மக்கள் சேவைநிதியகம்' அதிரைவாசிகளிடம் இருந்து ஜகாத்,ஃபித்ரா மற்றும் ஸதகா தருமங்களைத் திரட்டி அதிரையிலுள்ள ஏழை எளியவர்களுக்கு மார்க்கம் வழிகாட்டுதலுடன் பகிர்ந்தளித்து வருகிறது.
நோன்பு மற்றும் பண்டிகை காலங்களில் மட்டுமல்லாது ஆண்டு முழுவதும் தேவையுள்ளவர்களின் தேவைகளை கணக்கிட்டு திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருவதன்மூலம் ஏழை எளியோரின் குறைந்தபட்ச ஜீவாதாரதேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களில் முதியோர் உதவித்தொகை, இலவச மருத்துவ உதவி, கல்வி மற்றும் சீருடை உதவித்திட்டம் உள்ளிட்ட ஏழை எளியோரின் தவிர்க்கமுடியாத பெரும்செலவினங்களுக்கு அதிரை பைத்துல்மால் உதவி வருகிறது. இவைகளுக்கு ஜகாத் மற்றும் ஸதாக உதவிகளையே நம்பியுள்ளதையும் அறிவீர்கள்.
இந்நிலையில் AAMF ம் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது பைத்துல்மால் அபிமானிகளுக்கு சோர்வையும் அயர்ச்சியையும் தந்துள்ளது.அதிரை மட்டுமல்லாது சென்னை மற்றும் வளைகுடா நாடுகளில் குறிப்பாக யூ.ஏ.இ.,சவூதி,குவைத் ஆகிய நாடுகளிலுள்ள அதிரைவாசிகளின் நிதியுதவிகளையே நம்பி அதிரை பைத்துல்மாலின் நீண்டகாலத் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது என்றாலும் அங்குள்ள நமது சமுதாய இயக்கங்களுக்கும்,முஹல்லா அமைப்புகளுக்கும் கொடுத்ததுபோக எஞ்சியுள்ளவற்றையே அதிரை பைத்துல்மால் நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். அவற்றுடன் AAMFம் இதே திட்டங்களை செயல்படுத்துவதால் இதற்காகவே இயங்கிவரும் அதிரை பைத்துல்மால் செயல்பாடுகள் கேள்விக்குறியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அதிரை பைத்துல்மாலில் ஜகாத்,ஃபித்ரா விநியோகம் நமதூரின் அனைத்து முஹல்லா ஏழைகளுக்கும் பாரபட்சம் இல்லாது பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனினும், அந்தந்த முஹல்லா ஜமாத்துக்களும் இவற்றை செய்வதால் ABM ஐ மட்டுமே நம்பியுள்ள முஹல்லா ஜமாத் இல்லாத ஏழைகளுக்குத் தேவையான உதவிகளை நிறைவாகச் செய்ய முடியவில்லை என்ற நிலையில் ABM ன் செயல்பாடுகளைப் போன்ற ஒரே வகையிலான AAMFன் திட்டங்களால் கடந்த 18 ஆண்டுகளாகச் சிறப்பாக செயல்பட்டுவரும் அதிரை பைத்துல்மாலின் செயல்பாடுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் AAMF நிர்வாகிகளுக்கு கீழ்கண்ட ஆலோசனைகளை அன்பான கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன்:
1) அதிரையின் ஒற்றுமை மற்றும் ஒத்தக்கருத்து ஏற்படுத்தவும், ஊரளவிலான முடிவெடுப்பதற்கும் AAMF ஐயும், நிதியுதவிகள் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு ABM ஐயும் முன்னிறுத்துவது.
2) அதிரை பைத்துல்மாலின் சேவைகளுக்குப் பின்னடைவு ஏற்படாத வகையில் AAMF இற்கு தனித்தன்மையான, நீண்டகாலத்திட்டங்களைத் தீட்ட வேண்டியது.
3) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பில் ஊரளவிலான நிதியுதவிகளை இயக்கங்கள் சார்பில்லாத,மார்க்க வழிகாட்டல்கள் அடிப்படையில் இயங்கும் அதிரை பைத்துல்மால்மூலம் மட்டுமே விநியோகிப்பது.
குறிப்பு :- ஏற்கனவே அனைத்து முஹல்லா கூட்டமைப்பு குறித்து வெளியான ஓர் பதிவு
ABM ஒப்புதலுடன்
குறிப்பு :- ஏற்கனவே அனைத்து முஹல்லா கூட்டமைப்பு குறித்து வெளியான ஓர் பதிவு
ABM ஒப்புதலுடன்
இப்படிக்கு,
N.ஜமாலுதீன்
050-4737200
அதிரை பைத்துல்மால்
துபாய் கிளை செயலர்