"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
25 மார்ச் 2012

காஷ்மீர் அதிர்ச்சியூட்டும் அடக்கத் தலங்கள்!

0 comments
காஷ்மீர் என்றாலே கடுங்குளிரையும் தாண்டிய ஏராளமான அதிர்ச்சிகள் உண்டு. சமீபத்தில் ஒரு முறையீடு தேசிய மனித உரிமைக் கழகத்தின் கதவைத் தட்டியது ராதாகாந்த திரிபாதி என்பவர் தான் இந்த அதிர்ச்சி கலந்த முறையீட்டை மனித உரிமை அமைப்பிடம் முன்வைத்தவர்.

இதனை தேசிய மனித உரிமை ஆணையம் மத்திய உள்துறைச் செயலரையும் மத்திய பாதுகாப்புத் துறைத் செயலரையும் இது தொடர்பாக கேள்வி கேட்டுள்ளது விசயம் என்ன வென்றால் வடக்குப் பகுதி காஷ்மீரின் பள்ளத்தாக்குகளில் சுமார் 38 இடங்களுக்கும் மேல் வரிசையாக உடல்கள் புதைக்கப்பட்ட சமாதிகள் அடுக்கடுக்கான, வரிசையாக ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன.

அடையாளம் தெரியாத பிணங்கள் பெட்டி பெட்டியாக புதைக்கப்பட்டுள்ளன இறந்தவர்கள் யார்? காணாமல் போனவர்களாக கருதப்பட்டவர்களா? அல்லது ஆயுதம் தாங்கிய குழுவுடனான மோதலில் இறந்தவர்களா? இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல்கள் தெரியுமா? அல்லது தகவல் வெளித் தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட மரணங்களா? என்பன போன்ற பல சந்தேகங்கள் இந்த மணல் மேடுகளால் எழுந்துள்ளது. இதனைத் தான் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். வடக்கு காஷ்மீர் பகுதியில் மனித நடமாட்டம் குறைவு என்பதால் பலரின் பார்வை இதன் மீது பல ஆண்டுகளாகப் படவில்லை இன்னிலையில் தான் ராதாகாந்த் மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டு இவைகள் பற்றிய முறையான விசாரனை வேண்டுமென்றுள்ளார் அத்துடன் ஜம்மு கஷ்மீர் மாநிலத்து மனித உரிமை ஆணையம் கிட்டத்தட்ட 2156 மண்மேடுகளுக்குள் புதைக்கப்பட்ட உடல்களின் மரபணு சோதனை நடத்தி அதன் சான்றை தற்போது உயிருடன் உள்ள உறவினர்களின் மரபணு மாதிரிகளுடன் பொருந்துகிறதா என்று ஆராயும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்ற மாநில மனித உரிமை அமைப்பின் உத்தரவிற்கு ஏற்ப சிறப்புப் புலனாய்வு குழு சுமார் 2730 அடையாளம் தெரியாத உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இவை மூன்று மாவட்டங்களில் 38 இடங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆராய்ந்து 11 பேர் அடங்கிய குழு முதல் கட்ட 17 பக்க அறிக்கையை வழங்கியுள்ளது.

காஷ்மீரில் உள்ள இடம் பெயர்ந்தோரின் பெற்றோர்கள் சங்கம் இந்த மண்மேட்டுக்குள் சுமார் 2373 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவலைக் கூறியுள்ளது. இந்த நிகழ்வுக்கும், அடிக்கடி மோதல் நடக்கவும் காரணமாக இருப்பது கிதிஷிறிகி சிறப்பு அதிகாரம் கொண்ட ஆயுதப்படைகள் தான் தங்கள் அதிகாரத்தை அத்துமீறி அதிக அளவு நபர்கள் கொல்லப்பட பயன்படுத்தியுள்ளது. எனவே, இந்த சிறப்புப் படைகள் எங்கெல்லாம் தாக்குதல் நடத்தியதோ அங்கு இறந்த ஆண் பெண்களை மரபணு சோதனை நடத்தி தகவல்களை பராமரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளது.


இதே போன்ற கொடூர உடல் புதைப்பு மேகாலயாவிலும் நடந்துள்ளதாம்? இதனை தேசிய மனித உரிமை ஆணையமே அம்மாநில ஞிநிறி இடம் விசாரித்துள்ளது அங்கு நூற்றுக்கு மேற்பட்ட உடல்கள் பல இடங்களிலும் ரகசியமாக புதைக்கப்பட்டுள்ளதை மனித உரிமை ஆணையம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது ஏனெனில் உச்ச நீதி மன்றத்தில் ராதாகாந்தின் முறையீட்டு மனு ஒன்று மேகாலயா பிரச்சனையை மையப்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த மனுவிலும் உறவினர்கள் பலருக்கு எவ்வித தகவலோ முன்னறிவிப்போ ஏதுமில்லாமல் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளனர் இதனை அடுத்து கேரோ நேசனல் லிபரேசன் ஆர்மி அமைப்பு இது குறித்து வினா எழுப்பியுள்ளது அத்துடன் இது தொடர்பாக சட்ட மன்றத்தில் உடனடியாக விவாதிக்கவும் வலியுறுத்தி உள்ளது. இதன் காரணமாகவே மேகாலயா மலைப் பிராந்தியத்தில் முழு அடைப்பும் நடத்தப்பட்டன.

இவை அனைத்தும் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் அடையாளம் இல்லாத உடல் அடக்கம் தொடர்பாக சூடான சர்ச்சையை வடகிழக்குப் பகுதிகள் மற்றும் ஜம்முகாஷ்மீரில் கிளப்பியுள்ளது.
சட்டம் ஒழுங்கு தீவிரவாத தடுப்பு என்கிற பெயரால் தேவையற்ற அடக்குமுறைச் சட்டங்கள் ஏராளமான அப்பாவிகளைக் கொன்றுள்ளது அவைகள் தற்போது தான் ஒவ்வொன்றாக நீதி மன்றங்களில் முறையீடுகளாவும், மனித உரிமை ஆணையத்தின் விசாரனை வழியாகவும், வெளியாகிவருகின்றன. இவைகளுக்கான விடைகள் என்ன என்பது கண்கட்டு வித்தையாகவே உள்ளது!

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி