"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
26 மார்ச் 2012

அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது?

0 comments
காஷிவசாக்கி-கரிவா அணுமின் ஆலையை ஜப்பான் மூடியது.

ஜப்பான், அணு சக்திப் பயன்பாட்டைக் கைவிட்டுவிடுவது என்ற கட்டத்தை சற்று நெருங்கியிருப்பதாகத் தெரிகிறது- ஃபுக்குஷிமா பிரச்சனைக்குப் பின்னர்- தற்காலிகமாகவேனும் இந்த முடிவை எடுக்க ஜப்பான் முன்வந்திருக்கிறது.

அங்கு நாடு முழுவதிலுமுள்ள 54 அணு உலைகளில் ஒன்று தான் தற்போது இயங்குகிறது. ஒரு அணுமின் நிலையம் முழுமையாக இழுத்து மூடப்பட்டுவிட்டது.


கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுனாமித் தாக்கியதில் ஃபுக்குஷிமா அணு உலைகள் உருகிப்போனச் சம்பவம் நடக்க முன்னர்வரை, ஜப்பான் அதன் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை அணுசக்தி மூலம் தான் பெற்றுக்கொண்டது.அங்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் பின்னரும், அணு உலைகளை ஓடவிட உள்ளூர் மக்கள் அனுமதிக்கவில்லை என்பது தான் இங்குள்ள சங்கதி.

இப்போது ஜப்பானின் காஷிவசாக்கி- கரிவா மின் ஆலையை இன்று மூடிவிட்ட பின்னர் அங்கு ஒரு உலை மட்டும் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதுவும் கூட வரும் மே மா மாதத்தில் செயலிழக்கச் செய்யப்படும்.

அணுச் சக்தியின் பாதுகாப்புத் தொடர்பில் எந்தளவுக்கு நம்பிக்கை வைக்கமுடியும் என்பது தான் இங்குள்ள பிரச்சனை.

ஒவ்வொரு 13 மாதங்களுக்கும் ஒருமுறை மேற்கொள்ளப்படும் வழமையான கண்காணிப்பு அல்லது பழுதுபார்க்கும் நடவடிக்கைகளின் பின்னரும் உலைகளை இயங்கவிடுவதற்கு உள்ளுர் மக்கள் தயாரில்லை.

மாற்று எரிசக்திகளில் கவனம்


அரசாங்கமோ, அங்குள்ள மக்களை சமதானப் படுத்துவதற்காக, கடுமையான நில அதிர்வுகளுக்கும் இந்த அணு ஆலைகள் ஈடுகொடுக்கக்கூடியவை என்பதை நிரூபிப்பதற்காக அதிர்வுச் சோதனைகளை நடத்திக்காட்டிவிட்டார்கள்.

இதற்கிடையில், மின்சாரக் கம்பனிகள் தமது பழங்கால


ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்தை சுனாமி தாக்கி
ஒரு வருடம் ஆகின்றது.

மின்நிலையங்களை தூசு தட்டி ஓட்டத் தொடங்கிவிட்டன.

அதுமட்டுமல்ல, ஜப்பான் அரசும் எரிவாயு மற்றும் மற்ற எரிபொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யவும் தொடங்கிவிட்டது.

இருந்தாலும் கடுங்கோடை காலத்தில் தேவைப்படுமளவுக்கு மின்சக்தியை இவற்றால் ஈடுசெய்யமுடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.

கடந்த ஆண்டில் நிறுவனங்கள் மின்சாரப் பாவனையை 15 வீதத்தால் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்ட சந்தர்ப்பத்தில், பெரிய பெரிய கம்பனிகள் எல்லாம் இரவு வேளைகளிலும் வார இறுதி நாட்களிலும் இயங்கி அதனைச் சமாளித்தன.

ஆனால் இதே நிலைமை நீடித்தால் நாட்டின் பெரும்பாலான தயாரிப்புகளை வெடிநாடுகளுக்கு நகர்த்த வேண்டியேற்படுமென்றும் அதனால் நாட்டின் பொருளாதாரத்துக்குத் தான் பாதிப்பு என்றும் உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி